நடிகை மஞ்சிமா மோகன் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து விரல் விட்டு இன்னும் அளவிலான சில படங்களில் நடித்திருக்கிறார். அச்சம் என்பது மடமையடா படத்தில் மஞ்சிமா மோகனை பார்த்த ரசிகர்கள் பலரும் தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்த்தனர்.
அதற்கேற்றார் போல இவருக்கு பட வாய்ப்புகளும் வரிசை கட்டியது. ஆனால், கவர்ச்சியாக நடிக்க முடியாது என ஆரம்பத்தில் பல்வேறு கண்டிஷங்களை போட்டார் மஞ்சிமா மோகன் என கூறப்பட்டது.
ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைவதை உணர்ந்த மஞ்சிமா மோகன், அளவான கவர்ச்சியான காட்சிகளில் நடித்த தயாரானார். இடையில் உடல் எடை கூடி குண்டாக்கி போன இவருக்கு பட வாய்ப்புகள் வருவது சுத்தமாக நின்று போனது.
மேலும் நடிகர் கௌதம் கார்த்திக்கை காதலித்து வந்த இவர் அவரையே திருமணம் செய்து கொண்டு தற்பொழுது திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டார்.
திருமணத்திற்கு பிறகு நடிப்பிலிருந்து விலகி இருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய கணவருடன் கலந்து கொண்டார் மஞ்சிமா மோகன்.
அந்த பேட்டியில் மஞ்சிமா மோகன் கௌதம் கார்த்திக்கிடம் ரகசியமான சில கேள்விகளை எழுப்புவது போலவும், கௌதம் கார்த்திக் மஞ்சிமா மோகனிடம் ரகசியமான சில கேள்விகளை எழுப்புவது போலவும் ஒரு விளையாட்டு இடம்பெற்று இருந்தது.
அந்த விளையாட்டின் போது கௌதம் கார்த்திக் தன்னுடைய மனைவியிடம் அவருடைய ரகசியமான கேள்வி ஒன்றை எழுப்பினார்.
படப்பிடிப்பு தளங்களில் படுக்கையறை அல்லது ரொமான்ஸ் காட்சிகளில் போது வேறு ஒரு சக நடிகரை நீங்கள் கற்பனை செய்து பார்த்து இருக்கிறீர்களா..? என்ற கேள்வி எழுப்பினார்.
இதற்கு பயங்கரமாக வெட்கப்பட்ட நடிகை மஞ்சிமா மோகன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால்.. ஆம், கற்பனை செய்து இருக்கிறேன் என கூச்சத்துடன் ஒப்புக்கொண்டிருக்கிறார்.