உடைந்து அழுதேன்.. நான் குண்டாக இருந்த போது வந்த அந்த கமெண்ட்.. மஞ்சிமா மோகன் கண்ணீர்..!

சமீபத்தில் சினிமாவில் அறிமுகம் ஆகி சில காலங்கள் மட்டுமே சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வந்தவர் நடிகை மஞ்சுமா மோகன். சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் அவருக்கு வரவேற்பு என்பது அதிகமாகவே இருந்தது.

சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா என்கிற திரைப்படத்தின் மூலமாகதான் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் மஞ்சிமா மோகன்.

இந்த திரைப்படத்தை கௌதம் மேனன் இயக்கியிருந்தார். பெரும்பாலும் கௌதம் மேனன் திரைப்படத்தில் கதாநாயகிகள் மிகவும் அழகாக காட்டப்படுவார்கள். அந்த வகையில் மஞ்சுமா மோகனுக்கும் அந்த திரைப்படத்தின் மூலமாக அதிக வரவேற்பு கிடைத்தது.

குழந்தை நட்சத்திரம்:

ஆரம்பத்தில் மலையாள திரைப்படங்களில்தான் நடித்து வந்தார் மஞ்சிமா மோகன். 1997 முதலே குழந்தை கதாபாத்திரமாக இவர் நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2000 வரை குழந்தை கதாபாத்திரத்தில் நடித்து வந்த மஞ்சிமா மோகன் அதற்குப் பிறகுதான் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.

கதாநாயகியாக நடிக்க துவங்கிய உடனே தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்று அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தில் நடித்தார். அந்த படத்திற்கு பிறகு சத்ரியன், இப்படை வெல்லும் என்ற திரைப்படங்களில் நடித்தார்.

தேவராட்டம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த போது அவருக்கும் நடிகர் கௌதம் கார்த்திக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவரை திருமணம் செய்து கொண்டார் மஞ்சிமா மோகன்.

நடிப்பில் ஆர்வம்:

திருமணத்திற்கு பிறகும்  ஒரு சில திரைப்படங்களிலும் சீரியஸ்களிலும் நடித்து வருகிறார், ஆனால், திருமணத்திற்கு முன்பு நடித்த அளவு இப்பொழுது அவர் படங்களில் கமிட் ஆவது இல்லை என்று கூறப்படுகிறது.

சினிமாவில் இன்னமும் சாதிக்க வேண்டும் என்கிற ஆசை மஞ்சிமா மோகனுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. அதனால்தான் இன்னமும் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளி போட்டு வருகிறார் மஞ்சிமா மோகன் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

கார்த்தியின் குடும்பத்தார் குழந்தை வேண்டும் என்று எதிர்பார்த்தாலும் கூட மஞ்சிமா மோகன் அதற்கு இப்பொழுது தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் கொஞ்சம் உடல் எடையுடன் இருப்பதை பார்த்து பலரும் அவர் கர்ப்பமாக இருப்பதாக நினைத்துக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து அவரை சுற்றி இருக்கும் பலரும் கர்ப்பமாக இருக்கீங்களா? என்று கேட்டு இருக்கின்றனர். இது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார் மஞ்சிமா மோகன். 10 பேர் என்னைப் பற்றி நல்லா கமெண்ட் பண்ணா இரண்டு பேர் மோசமா கமெண்ட் பண்ணுவாங்கன்னு தெரியும்.

அதையெல்லாம் நாம ஃபேஸ் பண்ணிடுவோம். ஆனால் வீட்டில் உள்ள பெரியவங்க கூட அந்த மாதிரி பேசும் பொழுது ரொம்ப கஷ்டமாகிவிடுகிறது. சில சமயங்களில் கௌதம் கார்த்திக்கை ஏன் திருமணம் செய்தேன் என்று கூட எண்ணி வருத்தப்பட்டு உள்ளேன். இதனால் கதறி அழுதுள்ளேன்.

என்னுடைய பார்ட்னர் எனக்கு ரொம்பவே சப்போர்ட் செய்து வரும் நிலையில் சோசியல் மீடியா புல்லிங்கை பொருட்படுத்தாமல் நகர்ந்து செல்ல ஆரம்பித்து விட்டேன் என்று கூறி இருக்கிறார் மஞ்சிமா மோகன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version