பக்கா மாஸ்… மஞ்சு வாரியார் பாடிய காசேதான் கடவுளடா… துணிவு பட பாடல் …!!

 2023 ஆம் ஆண்டு பொங்கல் அன்று அஜித் நடிப்பில் வெளிவர உள்ள திரைப்படம் தான் துணிவு. இந்த திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாவது சிங்கள் மஞ்சு வாரியார் பாடிய பாடலான காசேதான் கடவுளடா பாடல் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருள் ஆகிவிட்டது.

 இந்த பாடல் வரிகளில் இருக்கக்கூடிய ஒவ்வொரு வரிகளும் இன்றைய காலகட்டத்திற்கு காசு எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்து உணர்த்துவது போல் உள்ளது.

மேலும் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் துணிவு திரைப்படமானது அஜித் மற்றும் வினோத்துக்கு மூன்றாவது கூட்டணி என்று கூட கூறலாம்.

ஏற்கனவே இந்தக் கூட்டணியில் சமீபத்தில் வெளியான சில்லா ஜில்லா பாடல் விஜய்யின் வாரிசு பட பாடலான ரஞ்சிதமே பாடலை தூக்கி சாப்பிடும் அளவிற்கு அதிக அளவு வியூவர்சை பெற்றது.

 இதனை அடுத்து  துணிவு படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான காசேதான் கடவுளடா பாடல் வெளியாகி  ரசிகர்களின் முன்னிலையில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

ஜிப்ரன் இசையில் உருவாகியுள்ள எந்த பாடலை வைசாக்,மஞ்சு வாரியார், ஜிப்ரன் ஆகியோர் பாடியிருக்கிறார்கள் .வைசாக் எழுதிய இந்தப் பாடல் தற்போது வைரல் ஆகிவிட்டது என கூறலாம்.

 நல்ல பொருள் இருக்கக்கூடிய பாடல்களின் வரிசையில் இந்த பாடலும் இடம்பெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றபடி பாடல் வரிகள் அமைந்துள்ளதால் இளைஞர்களை ஈர்க்கக்கூடிய சக்தி எந்த பாடல் வரிகளுக்கு இருக்கும்.

பட்டி தொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டிருக்க கூடிய இந்த பாடல் ஆனது தற்போது மேலும் இளைஞர்கள்  முணுமுணுக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது.

கருவறை முதல் கல்லறை வரை காசு எப்படி எல்லாம் புழங்குகிறது என்பதை இந்த பாடல் பக்குவமாக எடுத்துக்காட்டி இருக்கிறது

இதனையடுத்து ரசிகர்கள் பாடல் பக்கா மாஸ் என கூறியிருப்பது படக்குழுவினர்களிடையே மிகுந்த திருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மிக விரைவில் நாம் மூன்றாவது பாடலையும் எதிர்பார்க்கலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …