AK61 படத்தில் AK-விற்கு ஜோடி இந்த நடிகை தான்..! – அடடா அற்புதமான ஜோடி..!

நடிகர் அஜித்குமார், இயக்குனர் ஹெச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில் வெளியான நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

பிரம்மாண்ட கூட்டணி இருந்தபோதிலும் இயக்குனர் வினோத் மீது ரசிகர்கள் கொண்ட நம்பிக்கை இருந்தபோதிலும் இந்த இரண்டு படங்களிலும் ஏதோ ஒரு விஷயம் மிஸ்ஸிங் என்ற விமர்சனம்தான் ரசிகர்கள் மத்தியில் வைக்கப்பட்டு வருகிறது.

இயக்குனர் ஹெச்.வினோத் தனக்கான கம் பேக்கை கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் தற்போது AK61 படத்தை இயக்கி வருகின்றார். இந்த திரைப்படம் வங்கியில் நடைபெறும் கொள்ளையை மையமாகக் கொண்டு உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த படத்தின் ஹீரோயின் யார் என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் தற்போது இந்த கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.

அசுரன் படத்தில் நடித்திருந்த நடிகை மஞ்சுவாரியர் AK61 படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஜூலை மாதம் இறுதியில் புனேவில் நடக்கவுள்ள படப்பிடிப்பில் நடிகை மஞ்சுவாரியர் கலந்து கொள்வார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. இதனை அறிந்த ரசிகர்கள் அற்புதமான ஜோடி என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …