ரஜினியோடு காம்போ போடும் குணா குகை நடிகர்!.. இதுதான்பா அந்த அப்டேட்டு!.

ஆக்ஷன் திரைப்படங்கள் மூலமாக அதிக பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுக்க முடியும் என்று நிரூபித்த இயக்குனர்களில் லோகேஷ் கனகராஜ் முக்கியமானவர். அவரது முதல் திரைப்படம் ஆன மாநகரம் திரைப்படத்தில் துவங்கி இறுதியாக வெளியான லியோ திரைப்படம் வரைக்கும் சண்டைக் காட்சிகள் இல்லாத லோகேஷ் கனகராஜின் திரைப்படங்களே பார்க்க முடியாது.

இது குறித்து ஒரு பேட்டியில் அவர் கூறும் பொழுது பத்து நிமிட காட்சிகள் சண்டை காட்சிகள் இல்லாமல் சேர்ந்தார் போல என்னால் யோசிக்க முடியவில்லை என்று கூறுகிறார் லோகேஷ். அந்த அளவிற்கு அவர் சண்டை காட்சிகள் மீது அதிக விருப்பம் கொண்டவர்.

ரஜினியோடு காம்போ

ஏனெனில் ஹாலிவுட்டில் வெளியாகும் சண்டை காட்சிகள் கொண்ட படங்கள் மீது ஆர்வம் கொண்டுதான் திரைத்துறைக்கு படம் எடுக்கவே வந்தார் லோகேஷ் கனகராஜ். அதே போல ஹாலிவுட்டில் இருக்கும் தரத்திற்கு சண்டைக் காட்சிகளை தனது திரைப்படங்களில் வைத்தார் லோகேஷ் கனகராஜ்.

அதனால்தான் மற்ற ஆக்ஷன் திரைப்படங்களில் இருந்து லோகேஷ் கனகராஜின் திரைப்படங்கள் வித்தியாசமாக இருந்தன. லோகேஷ் கனகராஜ் அந்த மாதிரியான சண்டை காட்சிகளை வைக்கத் துவங்கிய பிறகுதான் இயக்குனர் நெல்சன் ஜெயிலர் திரைப்படத்திலும் அதே விதத்தை கடைப்பிடித்தார்.

குணா குகை நடிகர்

இந்த நிலையில் தொடர்ந்து அதிக வெற்றியை பெற்று வரும் லோகேஷ் கனகராஜ்தான் தற்சமயம் தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராக இருந்து வருகிறார். அதுவும் தற்சமயம் ரஜினிகாந்தை வைத்து அவர் இயக்கும் கூலி திரைப்படத்திற்கு போட்டிகள் அதிகமாக இருந்து வருகிறது.

இந்த படத்தை தயாரிப்பதற்கே நீ,  நான் என்று தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு வந்தனர். கே.ஜி.எஃப் திரைப்படத்தை இயக்கிய ஹம்பாளே ஃபிலிம்ஸ் நிறுவனம் கூட இந்த படத்தை தயாரிப்பதற்கு விருப்பம் தெரிவித்திருந்தது.

ஏனெனில் லோகேஷ் கனகராஜும் ரஜினியும் இணையும் ஒரு திரைப்படம் என்றால் அது தென்னிந்திய சினிமாவில் எப்படிப்பட்ட வசூலை பெற்றுக் கொடுக்கும் என்பது எல்லா தயாரிப்பாளர்களும் அறிந்த விஷயம்தான். இந்த நிலையில் இந்த வாய்ப்பு சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் சென்றுள்ளது.

கூலி திரைப்படத்தின் முதல்  டைட்டில் வீடியோ வெளியானது முதலே அந்த படம் மீதான எதிர்பார்ப்பு என்பது ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிடப் போவதாக நேற்று சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது.

இதுதான்பா அந்த அப்டேட்

இந்த நிலையில் இன்று படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன்படி படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் யார் யார் நடிக்கப் போகிறார்கள் என்கிற அப்டேட்டுகளை வழங்க துவங்கி இருக்கின்றனர்.

பொதுவாகவே லோகேஷ் கனகராஜ் திரைப்படம் என்றாலே நிறைய பிரபல நட்சத்திரங்கள் அதில் நடிப்பார்கள். அந்த வகையில் தற்சமயம் மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தில் பிரபலமான நடிகர் சோபின் ஷாகிர் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவர் மலையாளத்தில் மிகப் பிரபலமான நடிகர் ஆவார். மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார். குழிக்குள் விழுந்த சுபாஷை காப்பாற்றும் கதாபாத்திரமாக இவர் இருப்பார். இந்த நிலையில் இவருக்கு கூலி படத்தில் வில்லன் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்பது ரசிகர்களின் அனுமானமாக இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version