முன்பெல்லாம் பாலிவுட் சினிமாக்கள் மட்டும் தான் மிகச் சிறப்பான தேர்ந்தெடுத்த கதை தேர்ந்தெடுத்த கதையை வைத்து படம் இயங்குவார்கள் என ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்தனர்.
ஆனால், தற்போது சமீப காலமாக அதை மாற்றி எழுதி வருகிறது தென்னிந்திய பட சினிமாக்களும்.
வித்தியாசமான கதைக்களத்தில் யாரும் இதுவரை யோசிக்காத ஒரு கதையை படமாக்கி வியக்க வைக்கிறார்கள்.
பாலிவுட்டை ஆட்டிப்படைக்கும் தென்னிந்திய படங்கள்;
அப்படி வித்யாசமாக முயற்சிக்கும் இயக்குனர்களுக்கு அந்த உழைப்பு மிகப்பெரிய பலனை கொடுக்கிறது என்றால் அதற்கு மிகப்பெரிய ஆதாரமாக உதாரணமாக இருப்பது “மஞ்சுமல் பாஸ்” திரைப்படம்.
மலையாள சினிமாவில் இருந்து வெளியான இந்த திரைப்படம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் கொண்டாட வைத்துள்ளது.
“சிதம்பரம் எஸ் பொதுவாள்” இயக்கத்தில் உருவாக்கிய இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையாக எடுத்துக்கப்பட்டுள்ளது.
இதில் நண்பர்கள் கூட்டமாக சேர்ந்து சுற்றி வருகிறார்கள். தங்களது விடுமுறையை கழிக்க கொச்சியில் இருந்து நண்பர்கள் குழு ஒன்று தமிழ்நாட்டில் உள்ள கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கிறது.
மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம்;
அவர்கள் கொடைக்கானலுக்கு புறப்படுவதற்கு முன்னர் நண்பர் ஒருவர் குணா குகையில் அதாவது கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த குணா திரைப்படத்தின் படமாக்கப்பட்ட இடத்தை பற்றி கூறுகிறார்.
அது தடை செய்யப்பட்ட பகுதியாக இருந்தாலும் குடிபோதையில் அதிக மகிழ்ச்சியுடன் நண்பர்களுடன் குணா குகைக்கு ஒருவர் சென்றுவிடுகிறார்.
அந்த குகைக்குள் பதுங்கி இருக்கும் ஆபத்துக்களை பற்றி அறியாத நண்பர்கள் அங்கு அலைந்து. திரிகின்றனர்.
ஒரு கட்டத்தில் கூட்டத்தில் இருந்த சுபாஷ் என்பவர் அந்த குணா குகைக்குள் விழுந்து விடுகிறார் அதன் பிறகு அவர் என்ன ஆனார்? உயிரோடு மீட்கப்பட்டாரா? என்பதுதான் இப்படத்தின் மீதிக்கதை.
வித்தியாசமான கதைக்கு கிடைத்த வெற்றி:
இப்ப படத்தின் கதை வித்தியாசமான கண்ணோட்டத்தில் பல திருப்பங்களுடன் எடுக்கப்பட்டு அந்த படம் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது.
அத்துடன் இந்தியா முழுக்க படம் மாபெரும் வசூலை குவித்திருந்தது. குணா படத்தில் பெற்ற பாடல் ஆன “கண்மணி அன்போடு” பாடல் இப்படத்தில் இடம் பெற்றிருந்தது.
இந்த பாடல் இளையராஜா இசையமைத்த பாடல் என்பதால் அந்த பாடல் தன்னுடைய அனுமதியின்றி பயன்படுத்தி விட்டதாக மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளருக்கு இசைஞானி இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இந்த விவகாரம் திரைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. பொதுவாகவே இளையராஜா தான் இசையமைத்த பாடல்களை யாரும் பொது கச்சேரிகளிலோ, மேடைகளிலோ பாடவே கூடாது என பல பேரை விமர்சித்தும் எச்சரித்தும் இருக்கிறார்.
இப்படியான சமயத்தில் மஞ்சுவல் பாய்ஸ் படத்தையும் எச்சரித்த இளையராஜாவுக்கு படத்தின் தயாரிப்பாளர் பதில் நோட்டீஸ் அனுப்பிருந்தது.
எச்சரித்த இளையராஜாவுக்கு தயாரிப்பாளர் பதில்:
அதில் கூறியதாவது, ” நாங்கள் முறைப்படி இரண்டு நிறுவனங்களிடம் அனுமதி வாங்கி தான் “கண்மணி அன்போடு” பாடலை இப்படத்தில் பயன்படுத்தி இருக்கிறோம்.
அதாவது தெலுங்கு உரிமை மற்றும் மற்ற மொழி உரிமை என இரண்டு நிறுவனத்திலும் நாங்கள் முறையாக அனுமதி பெற்று இருக்கிறோம்.
எனவே இதற்கான முழு உரிமை நாங்கள் பயன்படுத்த எங்களுக்கு உள்ளது. இந்த புகார் தேவையற்ற புகார் என இளையராஜாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தற்போது இந்த விவகாரம் கேரள மற்றும் தமிழ் சினிமாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.