தமிழ்நாட்டில் மஞ்சும்மெல் பாய்ஸ் செய்த மொத்த வசூல்.. சுதாரிக்குமா தமிழ் சினிமா..?

காலம் மாறி வருகிறது நல்ல திரைப்படங்கள் என்றால் அதை ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள். அதற்கும் மொழிக்கும் சம்பந்தம் இல்லை என்பதை உணர்த்தக்கூடிய வகையில் தற்போது மஞ்சும் மெல் பாய்ஸ் என்ற மலையாளத் திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் சிக்ஸரை தட்டி அடுத்து வருகிறது.

இதையும் படிங்க: ஆண் நண்பருடன் ஓடிப்போன இளம் நடிகை.. அம்மா தலையில் விழுந்த இடி.. இனிமே நடிக்க மாட்டாராம்..

இதைப் பார்த்து வரும் திரை பிரபலங்கள் பலரும் ஆச்சிரியத்தோடு இது எப்படி சாத்தியம் என்று அவர்களுக்குள் ஒரு பட்டிமன்றமே போட்டு நடத்தி வருகிறார்கள்.

மஞ்சும்மெல் பாய்ஸ்..

இந்தத் திரைப்படமானது 1991 ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி வெளியான தமிழ் திரைப்படமான குணா திரைப்படத்தில் இடம் பிடித்திருக்கும் குணா குகையை பார்வையிட சென்ற நண்பர்களில் ஒருவன் குகையின் பள்ளத்தில் விழ அந்த நண்பனை மீட்டு எடுக்க கூடிய வகையில் மற்ற நண்பர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை.

இந்த கதையின் கிளைமாக்ஸ் இல் கண்மணி அன்போடு காதலன் என்ற குணா படத்தின் பாடலை வைத்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தை கொள்ளை அடித்து இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் சக்கை போடு..

மேலும் தமிழ் சினிமாவில் எந்த ஒரு படமும் சொல்லிக் கொள்ளும் படி வந்து வசூலை வாரி குவிக்காத நிலையில் மலையாள படங்கள் தொடர்ந்து வசூலை வாரி எடுத்து வருகிறது.

அந்த வகையில் மலையாளத்தில் வெளி வந்த பிரேமலு திரைப்படம் 75 கோடி வசூலை பெற்று விட்ட நிலையில் மம்முட்டியின் பிரேமயுகம் திரைப்படமானது 60 கோடி வசூலை எட்டியுள்ளது என சொல்லப்படுகிறது.

இரண்டாவது வார முடிவில் இத்தனை கோடியா..

இந்நிலையில் இந்த இரண்டு படங்களுக்குப் பின்பு வெளி வந்த மஞ்சு மெல்பாய் திரைப்படம் அதிரடியாக கிட்டத்தட்ட 90 கோடி வசூலை செய்து மற்ற படங்களுக்கு கடுமையான போட்டியினை தந்துள்ளது.

இந்நிலையில் பிற மொழி படங்கள் தமிழில் டப் செய்தால் தான் ஓடும் என்ற நிலையை மாற்றி மலையாள படங்களை நேரடியாக பார்த்து வரும் தமிழ் ரசிகர்கள் தற்போது மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படத்தை தெறிக்க விட்டார்கள் என்று சொல்லலாம்.

இதனை அடுத்து இந்த திரைப்படமானது இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் சாஹிர், ஸ்ரீநாத், பாஸி உள்ளிட்ட பல இளம் நடிகர்களின் நடிப்பில் வெளி வந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருப்பதோடு கடந்த ஏழு நாட்களில் 50 கோடி வசூலை எட்டிய இந்த படம் இரண்டாவது வார முடிவில் 90 கோடி வசூலை கடந்துள்ளது. அடுத்த வாரத்திற்குள் 100 கோடியை எட்டிவிடும் என்ற இனிப்பான செய்தியை பட குழு வெளியிட்டுள்ளது.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறிவிட்டதோடு அந்த திரைப்படத்தை பார்க்கக் கூடிய ஆவலில் அனைவரும் திரையரங்குகள் நோக்கி படையெடுக்கிறார்கள். எனவே இந்த சம்மரில் மிகச்சிறந்த படமாக இந்த படத்தை அனைவரும் கொண்டாடி வருகிறார்கள்.

இதையும் படிங்க: நான் வாயை தொறந்தா வடிவேலுவின் மிச்ச மானமும் போயிடும்.. சாட்டை சுழற்றிய சீரியல் நடிகை..

எனவே நீங்களும் வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் இந்த திரைப்படத்தைச் சென்று பார்த்தால் உண்மை என்ன என்பது உங்களுக்குத் தெரிந்துவிடும். இந்த பட குழுவினை உலகநாயகன் கமலஹாசன் அழைத்து வாழ்த்து தெரிவித்திருந்தது பலருக்கும் ஆச்சிரியத்தையும் படத்தின் தன்மையையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version