நடிகர்கள் மட்டும்தான் 9 வேடங்களில் கலக்குவார்களா? நடிகை மனோரமா 9 வேடங்களில் நடித்த திரைப்படம்..!

தமிழ் திரை உலகில் பழம்பெறும் நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை மனோரமா சிறு வயதிலிருந்தே எண்ணற்ற துயரங்களில் இருந்து வந்த இவர்  திரை உலகில் படைத்த சாதனைகள் அளவில்லாதது.

 இவர் கைக்குழந்தையாக இருந்த போதே தந்தையின் அரவணைப்பு கிடைக்காமல் தாயாருடன் தனித்து வாழ்ந்து வந்த இவர் ஒரு கட்டத்தில் தனது தாயாரின் உடல் நிலையும் சரி இல்லாமல் போக பண்ணையார் வீட்டில் குழந்தையை பார்த்துக் கொள்ளக்கூடிய பணிக்குச் சென்றார்.

 மேலும் இவருக்கு பாடக்கூடிய திறன் நன்றாக இருந்ததால் நாடகத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு தேடி வர பல நாடக கம்பெனிகளின் நாடகங்களில் நடித்திருக்கிறார்.

அந்த சமயத்தில் நாடக நடிகரான எஸ் எம் ராமநாதனை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது தாயார் வீட்டுக்கு பிரசவத்திற்காக வந்திருந்தார். எனினும் குழந்தை பிறந்த பிறகும் இவரை சந்திக்க இவரது கணவர் வரவே இல்லை.

 குழந்தை பிறந்து 15 வது நாளில் தனது மனைவியை சந்திக்க வந்த இவர் அவரை நாடகத்தில் நடிப்பதற்காக அழைத்தார். ஆனால் 15 நாட்கள் ஆன நிலையில் இவர் எப்படி நாடகத்தில் நடிக்க முடியும் என்ற தனது கணவரிடம் கேட்க கணவர் இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

 அதன் பிறகு இவரை பார்க்க வரவே இல்லையாம் ஒற்றைத் தாயாய் நின்று தனது குழந்தையை சிறப்பான முறையில் வளர்த்து வந்த இவர் பல சோதனைகளை தாண்டி சினிமாவில் கொடிகட்டி பறந்தார்.

இதனை அடுத்து தற்போது இவர் ஒன்பது வேடங்களில் நடித்த திரைப்படம் குறித்து ஒரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

 சிவாஜி கணேசன் எப்படி 9 வேடங்களில் நவராத்திரி என்ற திரைப்படத்தில் 1964 இல் அடித்தாரோ அதுபோலவே மனோரமாவும் ஒன்பது வேடங்களில் நடித்த அந்த திரைப்படத்தின் பெயர் கண்காட்சி என்பதாகும்.

இந்த திரைப்படம் 1971 ஆம் ஆண்டு வெளிவர இந்தப் படத்தில் கதாநாயகியாக அவன் நடித்திருந்தார் மேலும் இந்த படத்தில் சிவக்குமார் குமாரி பத்மினி ஆகியோர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பல இக்கட்டுகளை சந்தித்து சாதிக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய பெண்களுக்கு முன் உதாரணமாக திகழக்கூடிய மனோரமா ஆச்சியை அனைவரும் மனதில் கொண்டால் பெண்கள் நிச்சயமாக அவனைப் போல சாதிக்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam