Site icon Tamizhakam

அட தொயரத்த.. திரிஷா.. கூவத்தூர் சர்ச்சை.. மன்சூர் அலிகான் கொடுத்த Thug Life கமெண்ட்..

தென்னிந்திய திரை உலகை மட்டுமல்லாமல் தற்போது பாலிவுட்டிலும் களம் இறங்கி இருக்கும் நடிகை திரிஷா தனது இரண்டாவது இன்னிங்ஸை பக்காவாக செய்து முன்னணி நடிகைகளில் ஒருவராக லேடி சூப்பர் ஸ்டாருக்கு டப் கொடுக்கக்கூடிய வகையில் பட எண்ணிக்கையை தன் கையில் வைத்திருக்கிறார்.

ஏற்கனவே மன்சூர் அலிகான் திரிஷா விவகாரம் இணையதளம் முழுவதும் கழுவி ஊற்றப்பட்டு வந்த நிலையில் தற்போது நடிகை திரிஷாவிற்கு ஆதரவாக நடிகர் மன்சூர் அலிகான் கண்டனம் தெரிவித்திருக்கும் விதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை திரிஷா..

எதற்காக நடிகர் மன்சூர் அலிகான் தற்போது பல்டி அடித்து திரிஷாவுக்கு வக்காலத்து வாங்கி இருக்கிறார் என்ற ரீதியில் ரசிகர்கள் தற்போது இந்த கூவத்தூர் சர்ச்சையை கூர்ந்து கவனித்து வருகிறார்கள்.

ஏற்கனவே நடந்த சர்ச்சையில் திரிஷாவிடம் பகிரங்க மன்னிப்பை கேட்ட மன்சூர் அலிகான் தற்போது கூவத்தூர் விவகாரத்தில் நடிகை திரிஷாவை தொடர்பு படுத்தி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு பேசிய பேச்சுக்கு இது போன்ற பேச்சுக்கள் ஆபத்தானவை. எதிர்கால சந்ததிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லக் கூடிய வகையில் அருவருக்கத் தக்கவை. இது சமுதாயத்தை பாதிக்கும் என்ற கருத்திணை பதிவு செய்து இருக்கிறார்.

கூவத்தூர் விவகாரம்..

மேலும் இந்த கூவத்தூர் விவகாரத்தில் அ தி மு க விலிருந்து நீக்கப்பட்ட சேலம் மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் ஆன ஏவி ராஜு அண்மை பேட்டியில் சர்ச்சை மீது வார்த்தைகளை அள்ளி வீசி விட்டார்.

அதில் கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி என்றும் கூவத்தூர் விடுதியில் நடிகைகள் வேண்டும் என வம்படியாக கேட்டவர் வெங்கடாசலம் என சொல்லி அந்த நடிகை திரிஷா என்ற பெயரை கூறியது தற்போது பெரும் பிரச்சனையாய் வெடித்துள்ளது.

தேவையில்லாமல் அரசியலில் முன்னணி நடிகைகளை இழுத்து அவர்களது பெயர்களை பாழாக்கக்கூடிய வகையில் தற்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏபி ராஜு பேசிய பேச்சு உள்ளதாக பலரும் கூறியிருக்கிறார்கள்.

நடிகர் மன்சூர் கண்டனம்..

நாகரீகம் இல்லாமல் ஒரு நடிகையின் பெயரை பொது வழியில் கூறி அசிங்கப்படுத்தி இருக்கும் ஏவி ராஜுவின் இந்த பேச்சை வன்மையாக கண்டிக்க கூடிய வகையில் மன்சூர் அலிகான் நடிகை திரிஷாவிற்கு ஆதரவு அளித்து பேசி இருக்கும் விவகாரத்தை ரசிகர்கள் அனைவரும் அட தொயரத்த கூவத்தூர் சர்ச்சையில் மன்சூர் அலிகான் கொடுத்த Thug Life கமெண்ட் என அவரை பாராட்டி வருகிறார்கள்.

தற்போது நடிகை திரிஷா தனது இரண்டாவது இன்னிங்ஸில் களை கட்டி பல திரைப்படங்களில் நடிக்க தயார் ஆகியிருக்கும் இந்த வேளையில் இது போன்ற பேச்சு அவரது மன நிலையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு மன உளைச்சலையும் ஏற்படுத்தும் என்று அவர்களது ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

எனவே அரசியல் பேசுவதாய் நினைத்துக் கொண்டு ஒரு பெண்ணின் பெயரை அதுவும் பிரபல நடிகையின் பெயரை பாழாக்க நினைத்த ஏவி ராஜுவின் செயலை வன்மையாக கண்டித்தது மட்டுமல்லாமல் அவர் நிச்சயமாக திரிஷாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகிறது.

மேலும் மன்சூர் அலிகான் திரிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருப்பதை பலரும் வரவேற்று இருக்கிறார்கள். எனவே இந்த சர்ச்சை முற்றுவதற்குள் உரிய நடவடிக்கையை அந்தந்த நபர்கள் வெளியிடுவதால் சமூகத்திற்கு நன்மை ஏற்படும். இல்லையெனில் என் மீது அவதூர் பரப்புவோருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரிஷா இந்த விவகாரம் தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version