கதை திருட்டு புகார்.. மாரி செல்வராஜ் கொடுத்த பதிலை பாருங்க..!

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் எழுத்தாளராக இருந்து அதன் பிறகு திரைப்பட இயக்குனராக அவதாரம் எடுத்து தற்போது தமிழ் சினிமாவின் நட்சத்திர அந்தஸ்தில் தொடர் வெற்றி படங்களை இயக்கி வருகிறார்.

இவர் “தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்” என்ற சிறுகதை தொகுப்பின் ஆசிரியர் அதன் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகி சிறு சிறு கதைகளை எழுதி திரைப்பட இயக்குனராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார் .

இயக்குனர் மாரி செல்வராஜ்:

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட முத்தான தமிழ் படங்களை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ் இன்று தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார்.

திருநெல்வேலி சொந்த ஊராகக் கொண்ட மாரி செல்வராஜ் அங்குள்ள புளியங்குளம் என்ற கிராமத்தில் சேர்ந்த விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.

இவர் இயக்கும் ஒவ்வொரு திரைப்படத்தில் தன்னுடைய வாழ்க்கையும் தன்னுடைய வாழ்க்கையின் வலிகளை சார்ந்து மறுபக்கத்தையும் தான் படமாக எடுத்து வருகிறார்.

அந்த வகையில் பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் அவர் தன்னுடைய தந்தையை காட்சிப்படுத்தியிருப்பார்.

இவரது தந்தை வெளியூர்களுக்கு சென்று வேடமிட்டு கூத்தாடுபவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய வாழ்க்கையின் வலியை மிகவும் ஆழமாகவும் அழுத்தமாகவும் கூறி அதை வெற்றி பெறச் செய்து வருகிறார் மாரி செல்வராஜ் .

தற்போது வாழை திரைப்படத்தை எழுதியிருக்கிறார். இந்த திரைப்படம் வெளியாகி அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

வாழை கதை என்னுடையது எழுத்தாளர் புகார்:

இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் வேளையில் மாரி செல்வராஜ் தன்னுடைய கதையை திருடி படமாக எடுத்துவிட்டார் என கூறி பிரபல எழுத்தாளர் சோ தர்மன் புகார் குறி பரப்பரப்பு ஏற்படுத்திருக்கிறார்.

ஏராளமான நண்பர்களிடமிருந்து போன் கால்கள்.வாழை படம் பாருங்கள்.உங்கள் சிறுகதை அப்படியே இருக்கிறது என்று.இன்று படம் பார்த்தேன்.

என் உடன் பிறந்த தம்பியும் என் தாய் மாமாவும் பெண் எடுத்திருக்கிற ஊர் திருவைகுண்டம் அருகில் உள்ள பொன்னங்குறிச்சி.வாழைதான் பிரதான விவசாயம்.நான் அங்கு போகும் போதெல்லாம் வாழைத்தார் சுமக்கும் சிறுவர்களின் கஷ்டத்தை பார்த்து எழுதியதுதான் என்னுடைய”வாழையடி……”என்கிற சிறுகதை.

என் கதையில் லாரி,டிரைவர்,கிளீனர்,இடைத்தரகர்,முதலாளி,சிறுவர்கள்,சிறுமிகள்,அவர்கள் படுகின்ற கஷ்டம்,கூலி உயர்வு எல்லாம் உண்டு.ஆனால் டீச்சர்,கர்ச்சீப்,காலாவதியாகிப் போன பொருட்கள், கம்னியூஸ்ட் கட்சி சின்னம், துன்பவியல் விபத்து கிடையாது.

வெகுஜன ஊடகமான சினிமாவுக்கு வந்ததால் வாழை கொண்டாடப்படுகிறது. ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதிய என்கதை இலக்கியமாகவே நின்று விட்டது.

இன்று கொண்டாடப்படுகின்ற ஒரு கதையை பத்தாண்டுகளுக்கு முன்பே நான் எழுதியிருக்கிறேன் என்று சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன் .

ஒருபடைப்பாளி என்கிற வகையில் கர்வமும் கொள்கிறேன்.இச் சிறுகதை என்னுடைய “நீர்ப் பழி”என்கிற சிறுகதைத் தொகுப்பில் இரண்டாம் கதையாக இடம் பெற்றிருக்கிறது.

கிராமங்களில் வாழையைப் பற்றி ஒரு சொலவடை உண்டு. “வாழை வாழவும் வைக்கும்.தாழவும் வைக்கும்.” என்னை வாழை வாழ வைக்கவில்லை என பதிவிட்டிருந்தார்.

மாரி செல்வராஜ் பதில்:

இவரின் இந்த பதிவிற்கு மாரி செல்வராஜ் ரசிகர்கள் பலரும். நீங்க வாழைத்தோட்டத்தில் வேலை செய்து கஷ்டப்பட்டு மக்களையும் சிறுவர்களையும் வேடிக்கை பார்த்து கதை எழுதி இருக்கிறீர்கள்.

ஆனால் எங்கள் அண்ணன் மாரி செல்வராஜ்…. அவர் வாழ்ந்த கதையவே திரையாக்கி இருக்கிறார் என பதிலடி கொடுத்து வருகிறார்கள் .

இந்த நிலையில் தற்போது சோ தர்மன் அவர்களின் பதிவுக்கு பதில் அளித்திருக்கும். இயக்குனர் மாரி செல்வராஜ்,

வாழைக்காய் சுமை தூக்கும் தொழிலாளர்களை பற்றி எழுத்தாளர் சோ தர்மன் அவர்கள் வாழையடி என்கிற பெயரில் எழுதிய சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன்.

இதோ அந்த வாழையடி சிறுகதை.. அவசியம் இந்த கதையை அனைவரும் வாசியுங்கள். . எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களுக்கு நன்றி என பதிவிட்டு இருக்கிறார் தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version