கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை மெரினா பீச்சில் நடைபெற்ற ஜல்லி கட்டு போராட்டத்தில் வீரமுழக்கமிட்டு பிரபலம் ஆனவர் மரியா ஜூலியனா.
இவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்னர் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அந்த சமயத்தில் தான் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தனது நண்பர்களுடன் கலந்துக்கொண்டு,
அதில் வீரமுழக்கமிட்டு கரகோஷமிட்டதால் அங்கு மிகப்பெரிய அளவில் தமிழ் மக்களிடையே பரீட்சியமானார்.
வீர மங்கை ஜூலி:
வீர மங்கையாக பெயர் எடுத்த ஜூலி சினிமாவை சார்ந்த பெண்ணாக இல்லை என்றாலும் ஹீரோயின் ரேஞ்சிற்கு மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். அதுவே ஜூலிக்கு அடையாளத்தை தேடித்தந்தது.
இதையும் படியுங்கள்: நடிகர் பிரசாந்த் பற்றி பலருக்கும் தெரியாத 10 உண்மைகள்.. அடேங்கப்பா..!
தலைப்பு செய்தியாக பேசப்படும் அளவுக்கு ஜூலியின் போராட்டம் , வீரமுழக்கங்கள் உள்ளிட்டவை வீர தமிழச்சி என்றெல்லாம் தலைப்பிட்டு அவரை புகழ் பாராட்டினார்கள்.
இதனால் மக்கள் மத்தியில் வெகு சீக்கிரத்திலேயே இடத்தை பிடித்தார் ஜூலி. அதன் மூலம் கிடைத்த புகழும் வரவேற்பையும் வைத்து பிக் பாஸ் முதல் சீசனில் பங்கேற்கும் வாய்ப்பு ஜூலிக்கு கிடைத்தது.
பிக்பாஸ் ஒரு மிகப்பெரிய மேடை என்பதை அறிந்துகொண்டு அதன் மூலம் இன்னும் பிரபலமாகி பெயர் எடுப்பார் என எல்லோரும் எதிர்பார்த்த சமயத்தில் அப்படியே அதற்கு எதிராமராக நடந்துக்கொண்டார்.
பிக்பாஸில் அவப்பெயர்:
ஆம், அவரை மக்கள் எப்படியெல்லாம் எதிர்பார்த்தார்களோ அதற்கு அப்படியே எதிர்மறையாக விளையாடி பலருக்கும் கடும் அதிர்ச்சி கொடுத்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பின்னர் ஜூலியின் பெயர் அப்படியே ரிப்பேர் ஆகிப்போனது. குறிப்பாக அவர் பொய் பேசுவது, புறம் பேசுவது என விமர்சிக்கப்பட்டார்.
இதையும் படியுங்கள்: கல்யாணம் பண்ணிக்க ஆசை தான்.. ஆனால்.. இந்த நோயை வச்சிகிட்டு எப்படி.. இடியை இறக்கிய மும்தாஜ்..!
அது மட்டும் இல்லாமல் ஓவியா விஷயத்தில் அவர் மிகவும் மோசமாக நடந்துக்கொண்டது யாருக்கும் பிடிக்கவில்லை.
குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது இவரை விமரிசித்து பல மீம்ஸ், சர்ச்சை பேச்சுகள் போன்ற உள்ளிட்டவை வெளியாகி அவருக்கு பெரும் தலைவலியை கொடுத்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் ஓடி விளையாடு பாப்பா என்கிற குழந்தைகளுக்கான நடன போட்டி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பங்கேற்றுள்ளார்.
அதிலும் நடுவர்களின் கேலி, கிண்டல்களுக்கு உள்ளாகி பெரும் விமர்சனத்தை சந்தித்தார். இதனால் அந்த நிகழ்ச்சியில் அவமானப்பட்டு அழுது புலம்பிய வீடியோக்கள் இணையத்தில் வெளியானது.
இதனால் ஜூலியின் உண்மையான முகம் இதுதான் என மக்கள் அவரை பலரும் விமர்சித்து பேச தொடங்கினார்கள்.
அதன் பின்னர் பட வாய்ப்பு கிடைக்க இவர் 2018-ம் ஆண்டு விமல் நடிப்பில் வெளிவந்த மன்னர் வகையறா திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார்.
குறிப்பாக அந்த படத்தில் மனப்பெண்ணாக நடித்து தனது திரை பயணத்தை தொடங்கியுள்ளார். பின்னர் அம்மன் தாயி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
நீட் அனிதாவாக ஜூலி:
அத்துடன் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கினார் ஜூலி, ஆம் நீட் தேர்வினால் உயிரிழந்த மாணவி அனிதாவின் வாழ்க்கை படத்தில் கமிட்டாகி நடித்து வந்தார்.
இதையும் படியுங்கள்: ஆத்தாடி.. எல்லாமே தெரியுதே.. இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை ரெஜினா..!
அப்படத்தின் போஸ்டர் மட்டும் தான் வெளியானது. அதற்குள் சில அரசியல் காரணங்களினால் இந்த படம் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டு நிறுத்தப்பட்டுவிட்டது.
பின்னர் சின்னத்திரைகளில் கவனம் செலுத்தினார். சின்னத்திரை நடிகர் ஒருவருடன் மாலையும் கழுத்துமாக நிற்கும் பாேட்டோ வைரலாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி அது பெரும் செய்தியானது.
தொடர்ந்து இப்படி ஏதேனும் சர்ச்சைகளில் சிக்கி வந்த ஜூலி தற்போது திரைப்படம் சீரியலில் கிடைத்த வாய்ப்புகளில் தவற விடாமல் நடித்து வருகிறார்.
கவர்ச்சி மோகம்:
இதனிடையே எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஜூலி அவ்வப்போது தனது புகைப்படங்களையும் வெளியிடுவார்.
திடீரென சில நாட்களுக்கு முன்பு பார்ட்டியில் வயதான ஒருவருடன் நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியது.
அதன் பலரால் விமர்சிக்கப்பட்டாலும் தொடர்ந்து தனது வேளைகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் தற்போது சினிமா நடிகைகளையே மிஞ்சும் அளவிற்கு,
படு கவர்ச்சியாக உடையணிந்து முரட்டு முன்னழகை காட்டி போஸ் கொடுத்து மூடுத்தியுள்ளார். ஜூலியின் இந்த கவர்ச்சி போட்டோவை பார்த்து நெட்சன்ஸ் காறித்துப்பி கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.