பூ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை தான் பார்வதி. இதன் பிறகு இவரின் நடிப்புத்திறனை பார்த்து தனுசுக்கு ஜோடியாக மரியான் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
தமிழில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருக்கும் இவர் மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.மேலும் படங்களில் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய இவர் இயல்பு வாழ்க்கையிலும் மிகச் சிறப்பான வகையில் செயல்படுகிறார்.
அது மட்டுமல்லாமல் படத்தில் பல கெட்டப்புகளில் போடப்படக்கூடிய உடைகளை நிஜ வாழ்க்கையிலும் போட்டுக் கொண்டு இருப்பவர்.தற்போது இவர் சமூக வலைத்தளங்களில் மற்ற நடிகைகளை போல இவரும் மிக ஆக்டிவாக இருக்கிறார். இந்த நிலையில் தற்போது பச்சை நிற மாடர்ன் டிரஸ் ஒன்றை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அனைவரும் வாயடைத்து விட்டார்கள் என்று கூறலாம். அந்த அளவு படும் மாடலான உடையில் மிக ஸ்மார்ட்டான லுக்கில் காட்சியளித்திருக்கிறார்.
இதில் நின்றபடியும் அமர்ந்தபடியும் குத்த வைத்த படியும் இவர் கொடுத்து இருக்கக்கூடிய போஸ்கள் ஒவ்வொன்றும் சூப்பர் என்று சொல்லலாம்.
மாடல் உடை என்றாலும் அதிக விரசத்தை வெளியே ஏற்படுத்தாமல் இந்த உடை மிகவும் அழகாக அவருக்கு பொருந்தியுள்ளது.
இதனை அடுத்து மரியான் பட நாயகி செம சூப்பர் என்று ரசிகர்கள் அனைவரும் கூறி வருவதோடு இவர் மீண்டும் தமிழ் திரைப்படத்தில் எப்போது நடிக்க நீங்க வருவீங்க என்பது போன்ற கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.
இதை அடுத்து இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் குவிந்து வருகிறது.பச்சை கிளி போல இந்த உடையில் நீங்கள் பார்க்க, பார்க்க அழகாக இருக்கிறீர்கள் என்று அனைவரும் கூறியிருக்கிறார்கள்.
மேலும் வைத்த கண் எடுக்காமல் இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் எந்த அழகுக்கு ஈடு இணை என எதுவும் இல்லை என்று புகழ்ந்து வருகிறார்கள்.