மீண்டும் உருவாகும் மருதநாயகம்..! ஆனால்.. ஹீரோ கமல் இல்லை.. இவரு தான்..! தாறு மாறு அப்டேட்..!

தமிழ் சினிமாவிற்குள் தொடர்ந்து மாற்று சினிமாவை கொண்டு வர வேண்டும் என்று நினைத்த சில முக்கிய பிரபலங்களில் கமல்ஹாசனும் ஒருவர்.

கமல்ஹாசன் திரைத்துறைக்கு வந்த காலகட்டம் முதலே ஹாலிவுட்டில் வருவது போன்ற திரைப்படங்களை தமிழில் படமாக்க வேண்டும் என்பதை கனவாக கொண்டிருந்தார். ஆரம்பக் கட்டத்தில் நிறைய இயக்குனர்களை இப்படி மாற்று சினிமாக்களை எடுப்பதற்கு தயார்படுத்தி இருக்கிறார் கமல்ஹாசன்.

வித்தியாசமான படங்கள்:

இயக்குனரும் நடிகருமான மனோபாலா ஒரு பேட்டியில் கூறும் பொழுது கூட ஆரம்பத்தில் கமல்ஹாசன் நிறைய உலக சினிமா படங்களை எனக்கு கொடுத்து அந்த மாதிரியான திரைப்படங்களை எடுக்கச் சொல்லி கூடியிருக்கிறார்.

ஆனால் நான் அவரது ஆசையை நிறைவேற்றியது இல்லை என்று கூறி இருக்கிறார். இப்படியாக கமல் தயாரித்த நிறைய மாற்று சினிமா திரைப்படங்கள் இப்போது தமிழில் வெகுவாக பேசப்படும் படங்களாக இருக்கின்றன.

மருதநாயகம் கதை:

அந்த வகையில் கமலின் கனவு திரைப்படம்தான் மருதநாயகம் வரலாற்று நாயகரான முகமது யூசஃப் கான் என்கிற மருதநாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பது கமலஹாசனின் நெடுநாள் கனவாக இருந்தது. எனவே அவரது சொந்த தயாரிப்பிலேயே மருதநாயகம் கதையை படமாக்கினார்.

அந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் கூட வெளிவந்த நிலையில் படம் வெளியாகவில்லை. பாதி படப்பிடிப்பிலேயே அந்த படம் நின்று போனது. கமல்ஹாசனின் ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்த ஒரு திரைப்படம் மருதநாயகம் என்று கூறலாம்.

மறு படப்பிடிப்பு:

அப்படி இருந்தும் கூட அந்த திரைப்படம் இறுதி வரை வெளியாகவே இல்லை. பல ஆண்டுகளாக அந்த படம் வெளியாகும் என்று ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு அது குறித்து பேசிய கமல்ஹாசன் கூறும் பொழுது திரும்ப மருதநாயகத்தை எடுப்பதாக இருந்தாலும் கூட அதில் நான் நடிப்பது என்பது இயலாத காரியம்.

திரும்ப முதலிலிருந்துதான் அதை படமாக்க வேண்டும் அதில் வேறு யாராவதுதான் நடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த வகையில் இந்த திரைப்படத்தில் சீயான் விக்ரம் நடித்தால்தான் சிறப்பாக இருக்கும் என்று அப்பொழுதே பேச்சுக்கள் இருந்தன.

இந்த நிலையில் தற்சமயம் விக்ரம் நடித்து வரும் தங்கலான் திரைப்படத்தில் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட மருதநாயகம் கமல்ஹாசன் போலதான் விக்ரம் இருக்கிறார். எனவே அடுத்து விக்ரம் நடிப்பில்தான் மருதநாயகம் உருவாகும் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. கமல்தான் இந்த திரைப்படத்தையும் தயாரிக்கப் போவதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களும் இதுவரை வெளிவரவில்லை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version