அறிவியலை மிஞ்சும் அதிசயம்..! – வருடா வருடம் மாசாணியம்மன் கோயிலில் நடக்கும் வினோதம்..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே இருக்கும் ஆனைமலை தாலுகாவில் அமைந்திருக்கும் கோயில் தான் மாசாணியம்மன் திருக்கோயிலில் ஆண்டாண்டு காலமாக  நடைபெறும் குண்டம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

 சுமார் 18க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சார்ந்த மக்கள் இந்த குண்டத் திருவிழாவை படு விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். இந்த திருவிழாவானது கடந்த மாதம் 21ஆம் தேதி கொடி ஏற்றத்தோடு  விமர்சனமான முறையில்   துவங்கப்பட்டது.

இந்த நிலையில் மயான பூஜையில் உள்ளுர் பெண்களும் பங்கேற்க மாட்டார்கள். ஆண்களுக்கு அதிக முக்கியத்துவம் இந்த பூஜையில் தரப்படும் என்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரக்கூடிய நியதியாகும்.

இதனை அடுத்து ஆழியார் ஆட்டம் கரையில் அமைந்திருக்கும் மயானத்தில் மயான பூஜை முதல் கொண்டு அனைத்தும் சீரும் சிறப்புமாக நடந்து முடிந்த உள்ள நிலையில் இன்று குண்டத்தில் எண்ணற்ற பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்த உள்ளார்கள்.

மேலும் அதிக அளவு ஆண்கள் தீமிதிக்க இறங்கும் போது பெண்கள் பூவை அள்ளித் தருவது என்று கூறக்கூடிய நெருப்பை கைகளால் அள்ளி வீசக்கூடிய நிகழ்வும் நடப்பது இந்த குண்டத் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.

இதில் சுற்றுவட்ட கிராம மக்கள் மட்டுமல்லாமல் மதுரையில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதால் இந்த திருவிழா படு ஜோராக இருக்கும்.

 மேலும் குழந்தைகளின் மனநிலைக்கு ஏற்ப எண்ணற்ற விளையாட்டு அரங்குகள், பொம்மை  கடைகள் போன்றவை அதிக அளவு ரோட்டில் இரண்டு பக்கங்களிலும்  ஆக்கிரமித்து இருக்கும்.

 இதனை அடுத்து மிகவும் கோலாகலமாக இந்த திருவிழா கொண்டாடப்பட்டு மறுநாள் மஞ்சள் நீராட்டு விழாவும் சிறப்பாக நடந்து விழாவானது முடிவுக்கு வரும். பக்தர்களின் எண்ணற்ற குறைகளை நீக்கக்கூடிய தாயாக மாசாணி  அம்மன் விளக்குகிறார்.

பலத்த போலிஸ் பாதுகாப்போடு அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காத வண்ணம் அம்பாலின் அருளோடு இந்த  தீமிதி  குண்டம் இறங்குதல்  நடைபெற்று அம்மனின் ஆசியை அனைவரும் பெறுவார்கள்.

 மேலும் தீ மிதிக்க இறங்கும்போது சூரியன் கூட வெளியில் வராத நிலையில்  மேகமூட்டத்தோடு தான் இந்த விழா நடைபெறும். இது இயற்கையாக அம்மன் பக்தர்களுக்கு அளிக்கக்கூடிய  ஒரு பாதுகாப்பாக கருதப்படுகிறது. அறிவியலை மிஞ்சும் வினோதம் வருடம் தோறும் நடக்கிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …