சிறப்பு வாய்ந்த மாசி பௌர்ணமி – இதை செய்தால் சகல செல்வங்களும் பெருகும்..!

எல்லா பௌர்ணமிகளுமே சிறப்பு வாய்ந்தது தான். அதிலும் குறிப்பாக மாசி மாதம் ஏற்படுகின்ற பௌர்ணமிக்கு அபூர்வ சக்தி இருப்பதாக நமது முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த மாசி மாத பௌர்ணமியானது வளர்பிறை சந்திரன் ஏற்படுகின்ற நாளில் வருகிறது.

 மாசி மாதத்தில் வருகின்ற மக நட்சத்திரம் மிகவும் மகத்துவம் வாய்ந்தது என்பதால் தான் மாசி மகப் பௌர்ணமி தினத்தை சிறப்பாக அனைவரும் கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் மகராசிக்கு சொந்தக்காரரான கேது பகவான் ஞானத்தையும் மோசத்தையும் அள்ளி வழங்குபவர். இந்த ஞானத்தை நாம் பெறுவதற்காகவும் செல்வத்தை அடைவதற்காகவும் மாசி மக பௌர்ணமி விரதத்தை மேற்கொண்டு சந்திர பகவானை வழிபட அனைத்து சம்பத்துக்களும் நமக்கு வந்து கிடைக்கும்.

 மாசி மக பௌர்ணமி அன்று அனேக சிவன், மற்றும் விஷ்ணு, முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் யாகங்கள் என பல உற்சவங்கள் நடைபெறும். மாசி பௌர்ணமி தினத்தன்று விரதம் இருந்து சத்ய நாராயண பூஜை செய்பவர்களுக்கு பலவித நன்மைகள் வந்து சேரும்.

மேலும் இந்த மாசி பௌர்ணமியில் நீங்கள் திருவண்ணாமலை சென்று கிரிவலம் வந்தால் கட்டாயம் உங்களுக்கு முக்கி கிடைக்கும் என்று கூறி இருக்கிறார்கள்.

 பிறவா நிலைக்குச் செல்ல இந்த பௌர்ணமியை அனைவரும் பயன்படுத்த வேண்டும். கணவனைத் பிரிந்து வாழும் பெண்கள் மாசிக் பௌர்ணமி விரதம் இருந்து திருவண்ணாமலை சிவனை தரிசித்து வழிபட்டால் பிரிந்தவர்கள் சேர்ந்து வாழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

உங்கள் குடும்பத்தில் அதிக அளவு கடனை வாங்கி அந்த கடனை கட்ட முடியாதவர்கள் அனைவரும் மாசி பௌர்ணமி அன்று சிவபெருமானை வழிபடுவதின் மூலமும் கிரிவலம் வருவதன் மூலமும் கடன் பிரச்சனையிலிருந்து விரைவில் விடுதலை பெறலாம். எனவே இந்த ஆண்டு வரக்கூடிய மாசி மக பௌர்ணமியை உங்கள் வீட்டில் விளக்கு ஏற்றி கடவுளை வழிபட்டு சகல சங்கத்தையும் பெறுங்கள்.

இந்த மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளைத்தான் மாசி மகம் என்று அனைவரும் கொண்டாடி வருகிறோம். இதனால்தான் மகத்துப்பெண் ஜகத்தை ஆள்வாள் என்ற கருத்துக்கள் நிலவியது.மேலும் திருமால் மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்த இந்த மாசி திருநாளை நீங்கள் நல்ல முறையாக கொண்டாடுங்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …