பன்முகச் திறமையை கொண்ட மிகச்சிறந்த நகைச்சுவை நடிகரான சிங்கம் புலி தமிழ் திரைப்படங்களில் இயக்குனராகவும், வசனகர்த்தாவாகவும் திகழ்ந்தவர்.
எப்படி ஒரு மனிதனின் பாடி லாங்குவேஜ் பார்த்ததும் நமக்கு குபீர் என்று சிரிப்பு வருகிறதோ அது போலவே இவரைப் பார்த்தால் எளிதில் சிரிப்பு நம்மை தொற்றிக் கொள்ளும்.
நடிகர் சிங்கம் புலி..
இவர் ஆரம்ப நாட்களில் திரைப்படங்களில் சின்ன, சின்ன வேடங்களில் நடித்ததை அடுத்து ஒரு முழு நீள காமெடியனாக பல திரைப்படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அந்த வகையில் 2009-ஆம் ஆண்டு நான் கடவுள் படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிகரித்தது.
இதனை அடுத்து இவர் இயக்குனராக பணியாற்றிய படங்கள் என்னென்ன என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அது 2002-ஆம் ஆண்டு அஜித்குமார் நடிப்பில் வெளி வந்த ரெட் திரைப்படத்தில் இயக்குனராக செயல்பட்டிருக்கிறார்.
அது மட்டும் அல்லாமல் 2005-ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக திகழும் சூர்யா மற்றும் ஜோதிகாவை வைத்து மாயாவி என்ற படத்தை இயக்கி இருந்தார்.
நான் கடவுள் படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் இணை இயக்குனராக திகழ்ந்த இவர் 2003 – ஆம் ஆண்டு பாலாவோடு இணைந்து இணை இயக்குனராக பிதாமகன் திரைப்படத்தில் பணியாற்றி இருக்கிறார். மேலும் அந்த படத்தில் வசனகர்த்தாவாகவும் விளங்கியவர் சிங்கம்புலி.
மாயாண்டி குடும்பத்தார் படத்தில் வாய்ப்பு..
இந்த நிலையில் இவர் மாயாண்டி குடும்பத்தார் என்ற திரைப்படத்தில் எப்படி நடித்தார் என்ற விஷயத்தை தற்போது ஓப்பனாக பகிர்ந்து இருக்கிறார்.
இந்த படத்தின் இயக்குனர் இவர் நண்பர் என்பதால் வெறும் இரண்டு நாட்கள் இந்த படத்தில் நடித்த தந்தால் போதுமானது என்று சொல்லி அழைத்துச் சென்றிருக்கிறார்.
மேலும் இரண்டு நாட்கள் அல்ல தொடர்ந்து 48 நாட்களுக்கு மேல் இந்த படத்திற்காக நடித்துக் கொடுத்ததாக சொல்லி அனைவரது ஆச்சரியத்தையும் அதிகரித்து இருக்கக்கூடிய சிங்கம்புலி இப்படி பல படங்களில் அவர் நடித்திருப்பதாக சொல்லி இருக்கிறார்.
மேலும் இது ஒரு பெரிய விஷயம் இல்லை. இரண்டு வருடங்கள் மூன்று வருடங்கள் தொடர்ந்து ஒரு படத்தை பண்ணியிருப்பதாக அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயத்தையும் சொல்லிய சிங்கம் புலி தன்னை யாருமே ஒரு இன்டர்வியூ கூட எடுத்தது இல்லை என்று தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து இருக்கிறார்.
ரகசியத்தை சொன்ன சிங்கம் புலி..
மேலும் இரண்டு நாட்கள் என்று சொல்லி அழைத்துச் சென்ற அந்த இயக்குனர் சின்னப் பிள்ளைகளுக்கு சாக்லேட் கொடுத்து ஏமாற்றுவது போல என்னை தொடர்ந்து மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நடிப்பதற்காக அழைத்துச் சென்று அந்தப் படத்தில் நடித்தது மூலம் படம் மாபெரும் வெற்றியை தந்தது.
மேலும் இந்த படத்தின் மூலம் எனக்கு வீடு வாசல் என அனைத்தையும் வாங்கி கொடுத்து அவர் இறந்து போய்விட்டார் என்ற உண்மையை பகிர்ந்து ரசிகர்கள் மத்தியில் ஷாக்கை ஏற்படுத்தி விட்டார்.
எனவே சினிமாவை பொறுத்த வரை எது நல்லது எது கெட்டது என்பதை நாம் உறுதியாக சொல்ல முடியாது.
திரை உலகை பொருத்தவரை 100% நாம் நம்முடைய பங்கை செலுத்துவதின் மூலம் நமக்கு அது எப்போது வேண்டுமானாலும் இரட்டிப்பு நன்மையை கொடுக்கும் என்ற உண்மையான கருத்தை பலருக்கும் புரிய வைக்க கூடிய வகையில் சொல்லி இருக்கிறார்.
மேலும் எந்த சமயத்தில் அதை கிளிக் ஆகுமோ அந்த சமயத்தில் தான் திரையுலகை பொருத்த வரை அது கிளிக் ஆகும்.
எனவே நம்முடைய காண்ட்ரிபியூஷன் 100% எப்போதும் இருக்க வேண்டும் என்பதில் சினிமாவில் நடிக்க கூடியவர்கள் உறுதியாக இருந்தால் வெற்றியை எளிதில் அடையலாம் என்று சொல்லி இருக்கிறார்.