இறக்கும் முன் மயிலு என்கிட்ட சொன்ன விஷயம் இது தான்..! – ட்ரம்ஸ் சிவமணி அதிர்ச்சி தகவல்..!

ட்ரம்ஸ் சிவமணி : புகழ்பெற்ற காமெடி நடிகர் மயில்சாமி இன்று (பிப்.19) அதிகாலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. திரைத்துறையினரை மட்டும் இல்லாமல் அவருடைய ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

மாரடைப்பால் இவர் உயிரிழந்தார் என்று தகவல் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் நிலையில் பிரபல இசைக்கலைஞர் ட்ரம்ஸ் சிவமணி.

சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், இன்று (பிப்.19) என்னுடைய நீண்ட நாள் ஆசை இது.. என்று தன்னிடம் ஒன்றை கூறியதாக கூறியிருக்கிறார். முன்னதாக நேற்று சிவராத்திரியை ஒட்டி இந்தியா முழுவதும் உள்ள சிவாலயங்களில் விடிய விடிய பூஜைகள் நடைபெற்றது.

இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிவராத்திரி கொண்டாடினார்கள். அதேபோல நடிகர் மயில்சாமியும் சென்னையில் இருக்கக்கூடிய புகழ்பெற்ற சிவாலயமான அருள்மிகு ஸ்ரீ மேகநாதேஸ்வரர் ஆலயத்தில் விடியற்காலை 3 மணி வரை சிவராத்திரி பூஜைகளில் பங்கேற்று இருக்கிறார்.

இவருடன் ட்ரம்ஸ் சிவமணி இருந்திருக்கிறார். ட்ரம்ஸ் சிவமணி ட்ரம்ஸ் இசைக்க அந்த இசையை பதிவு செய்யும் மைக்கை தன்னுடைய கையில் பிடித்தபடி அமர்ந்திருந்த மயில்சாமியின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் மயில்சாமியின் கடைசி நிமிடங்கள் என்ற வகையில் இந்த வீடியோ காட்சிகள் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மூன்று மணிக்கு தரிசனம் முடிந்து வீட்டிற்குச் சென்ற மயில்சாமிக்கு டிரம்ஸ் சிவமணி தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தந்ததற்கு நன்றி என கூறி இருக்கிறார்.

அப்பொழுது சோர்ந்து போன குரலில் பேசி இருக்கிறார் மயில்சாமி. சரி இவ்வளவு நேரம் கண்விழித்திருந்ததால் ஏதேனும் சோர்வாக இருப்பார் என்று நினைத்து நான் விட்டுவிட்டேன்.

ஆனால் ஐந்து மணிக்கு எனக்கு இவர் மாரடைப்பால் இறந்து விட்டார் என்ற தகவல் கிடைத்தது. அதிர்ந்து போனேன். சற்று முன் வரை என் உடன் பேசிக் கொண்டிருந்த மயில்சாமி தற்போது இல்லை என்று அதிர்ச்சியில் உறைந்து போனேன்.

கோயிலில் என்னிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது தன்னுடைய நீண்ட நாள் ஆசை என்று ஒரு விஷயத்தை மயில்சாமி என்னிடம் கூறினார். அதாவது சென்னை மேலகோட்டையூரில் இடம் பெற்றுள்ள இந்த ஸ்ரீமேகநாதன் திருக்கோவிலில் நடிகர் ரஜினிகாந்தை அழைத்து வந்து இங்கு வீற்றிருக்கும் சிவலிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்ய வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை என்று கூறினார்.

நானும்.. மயிலு.. அது நடக்கும்.. அண்ணனும்(ரஜினிகாந்த்) பரம சிவ பக்தர். கண்டிப்பா இது நடக்கும். நாம இதை பண்ணுவோம் என்று கூறினேன். ஆனால், தற்போது மயில்சாமி இல்லை என்று தழுதழுத்த குரலில் பேசியுள்ளார்.

Summary in English : Mayilsamy was a close friend of Sivamani and a mentor to him in his musical journey. He had asked Sivamani to fulfill his last wish before he passed away. This story has brought light to the importance of cherishing our loved ones while they are still alive and fulfilling their wishes.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …