“எனக்கும் சத்யராஜூக்கும் போட்டி இருந்துச்சு… ஆனால்..” கேப்டன் விஜயகாந்த் நெகிழ்ச்சி பேச்சு..!

கேப்டன் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் நட்சத்திர அந்தஸ்தை பிடித்து பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டார்.

கருமையான தோற்றம் கொண்டிருந்தாலும் கூட இவரது நடிப்பும் சமூகம் சார்ந்த விஷயங்களில் இவர் பேசும் கருத்தான டயலாக் உள்ளிட்டவை மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து இருந்தது.

நடிகர் விஜயகாந்த்:

எந்த ஒரு திரை பின்பலமும் இல்லாத குடும்பத்தில் இருந்து நடிக்க வந்த விஜயகாந்தின் நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களின் மனம் கவர்ந்ததாக பார்க்கப்பட்டது.

தான் 1 வயது குழந்தையாக இருந்தபோதே தன்னுடைய தாயாரை இழந்த விஜயகாந்த் சிறுவயதிலிருந்தே சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் படிப்பில் கவனத்தை செலுத்தாமல் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு பின்னர் சினிமா துறைக்கு வந்தார்.

விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் ஆன ஊமை விழிகள், தெற்கத்தி கள்ளன், சத்ரியன், என் ஆசை மச்சான், நரசிம்மா, வல்லரசு, சொக்கத்தங்கம், தென்னவன், எங்கள் அண்ணா, கஜேந்திரா உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் மக்களின் மனம் கவர்ந்தார்.

இதனிடையே கேப்டன் விஜயகாந்த். கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி தனது உடல் நலக்குறைவு காரணமாக தன்னுடைய 76 வயதில் மருத்துவமனையில் காலமானார் .

வரலாறு படைத்த கேப்டன் மரணம்:

இவரது மரண ஊர்வலத்தில் பல கோடிக்கணக்கான மக்கள், ரசிகர்கள் கலந்து கொண்டது மிகப்பெரிய வரலாறாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் பல வருடங்களுக்கு முன்னர் கேப்டன் விஜயகாந்த் நிகழ்ச்சி ஒன்றில் சத்யராஜ் குறித்து மிகவும் பெருமையோடு பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது .

அந்த நிகழ்ச்சியில் பேசி இருக்கும் கேப்டன் விஜயகாந்த்… “எனக்கும் சத்யராஜூக்கும் சினிமாவில் போட்டி இருப்பது உண்மைதான்.

ஆனால் , எப்படிப்பட்ட போட்டி என்றால் அது மிகவும் ஆரோக்கியமான போட்டி. இவருடைய நண்பன் ராமநாதன் இருக்கிறார் .

எனக்கும் சத்யராஜும் போட்டி:

அதே போல் என்னுடைய நண்பன் இப்ராஹிம் இவங்க ரெண்டு பேருக்குள்ள முதலில் போட்டி வரும். நான் படம் எடுப்பது பெருசா? நீ படம் எடுப்பது பெருசா? என அவர்களுக்குள் முதல் போட்டி வரும்.

அந்த போட்டியில் மிகவும் ஆரோக்கியமான போட்டியாக தான் அன்று இருந்தது. எங்களுக்குள் தனிப்பட்ட முறையில் எந்தவிதமான போட்டியோ பொறாமையோ இல்லை.

25 வருடமாகிறது இன்றும் சத்யராஜ் சார் சினிமாவில் இருக்கிறார் என்றால் அவர் யாரையும் விரோதியாக நினைத்ததே கிடையாது.

எல்லோரையும் நண்பராக தான் நினைத்திருக்கிறார். தன்னுடைய வளர்ச்சியை பொறாமையாக ஒருபோதும் அவர் எடுத்துக் கொள்ளவே இல்லை.

போராட்டமாக தான் எடுத்துக் கொண்டு ஜெயித்து வந்தார். அப்படி நினைத்ததால் தான் என்று இந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறார்.

அவர் எந்த அளவுக்கு உயர்ந்த உச்சத்தை தொட்டு இருக்கிறாரோ அந்த அளவுக்கு அவரது நல்ல மனமும். உள்ளது .

சத்யராஜ் குறித்து விஜயகாந்த் பெருமிதம்:

அதுமட்டுமில்லாமல் சத்யராஜின் மகனும் சினிமாவில் இப்போது ஹீரோவாக அறிமுகம் ஆகி இருக்கிறார் இவரே இன்னும் திரைப்படத்துறையில் இருந்து விலகவில்லை அதற்குள் அவரது மகன் ஹீரோவாகி இருக்கிறார் .

சத்யராஜின் மகன் கூட அவர் அளவிற்கு வளர்ந்து வருவாரா? என்பது தெரியவில்லை. காரணம் இன்றும் கர்லா கட்டையை எடுத்து சுற்றிக்கொண்டு மிகவும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார்.

எனவே சத்யராஜ் இடத்தை வேறொரு நடிகர் பிடிப்பது என்பது மிகவும் கடினம் என விஜயகாந்த் மிகவும் பெருமையோடு பேசியிருக்கிறார். இந்த பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam