“கொத்தமல்லிக்குள் ஒளிந்திருக்கும் மருத்துவ குணங்கள்..!” – படித்தாலே ஆச்சரியப்படுவீங்க..!!

நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய கொத்தமல்லியில் ஒளிந்திருக்கும் மருத்துவ குணங்களை நீங்கள் படிக்கும் போதே ஒரு நொடி வியந்து போகக்கூடிய அளவுக்கு அற்புதமான பொருளாக இது விளங்கும்.

இந்த கொத்தமல்லி தாவரத்தின் இலை, உலர்ந்த பழம், வேர் என எல்லா பகுதிகளுமே பல்வேறு பயன்பாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த கொத்தமல்லியை மனிதர்கள் பயன்படுத்தி இருப்பதற்கான ஆதாரத்தை தொல்பொருள் ஆய்வுகளில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

கொத்தமல்லியின் வேறு பெயர்கள்

இந்த கொத்தமல்லியை முழு மல்லி, குண்டுமல்லி, உருட்டு மல்லி, வர மல்லி, தனியா என்று பல பெயர்களால் அழைக்கிறோம்.

கொத்தமல்லியில் ஒளிந்திருக்கும் மருத்துவ நன்மைகள்

👍கொத்தமல்லி ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை மற்றும் கெட்ட கொழுப்பினை குறைக்கக்கூடிய அற்புதமான பணியை செய்கிறது. அதுமட்டுமல்லாமல் நரம்பு சார்ந்த பிரச்சினைகளுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக உள்ளது.

👌செரிமான பிரச்சனைகளிலிருந்து உங்களை பாதுகாக்கவும் தோல் நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகவும் இருக்கும். இந்த கொத்தமல்லி நோய் எதிர்ப்பு சக்தியை அதிக அளவு மனிதர்களுக்கு தரக்கூடிய இயல்பு கொண்டது.

👍மேலும் கொத்தமல்லி இலையில் கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் கே, மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் அதிக அளவு காணப்படுகிறது.

👌எலும்புகளை உறுதியாக கூடிய தன்மை இந்த கொத்தமல்லிக்கு இருப்பதால் பெண்கள் அதிக அளவு 30 வயதுக்கு மேல் இந்த கொத்தமல்லியை உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் எலும்பு சம்பந்தப்பட்ட வியாதிகளில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

👍சிறுநீரகங்க பாதைகளில்  ஏற்படக்கூடிய தொற்றுக்களை குணப்படுத்துவதில் மிகச் சிறப்பான பணியை இந்த கொத்தமல்லி செய்து வருகிறது. மேலும் இதில் வாய் தொல்லையினால் ஏற்படக்கூடிய அவதியிலிருந்து நிவாரணம் தருகிறது.

👌சளியினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், இருமலால் அவதிப்படுபவர்கள், ஒற்றைத் தலைவலியை தாங்க முடியாதவர்கள் இந்த கொத்தமல்லியை சிறிதளவு நீரில் போட்டு நன்கு சூடு செய்து இளம் சூட்டில் பருகுவதின் மூலம் மேற்கூறிய அனைத்து விதமான உபாதைகளிடமிருந்தும் விடுதலை பெற முடியும்.

எனவே வீட்டில் இருக்கும் பொருள்தானே என்று அசால்டாக இருக்காமல் கையில் இருக்கும் பொருளைக் கொண்டு நீங்கள் உங்கள் பக்குவத்தில் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …