“மறந்து போன கொள்ளு பருப்பு..!” – ஓளிந்திருக்கும் மருத்துவ குணங்கள்..!!

கிராமப்புற பகுதிகளில் சனிக்கிழமை என்றாலே தலைக்கு குளித்து கொள்ளு தொக்கினை உணவில் கலந்து சாப்பிடுவது இன்று வரை பழக்கத்தில் உள்ளது.

 இதனால்தான் என்னவோ சனி நீர் ஆடு என்று கூறி இருக்கிறார்களா? என்று நினைக்கத் தோன்றும். அப்படிப்பட்ட கொள்ளு பருப்பினை இன்று நகரவாசிகள் என்ன அது என்று கேட்கக் கூடிய அளவிற்கு மறந்து போய்விட்டதன் காரணமாகத்தான் உடல் பருமனால் சின்னஞ்சிறு குழந்தைகளும் பாதிப்படைந்து இருக்கிறார்கள்.

 அப்படிப்பட்டவர்கள்  கொள்ளின்  மகத்துவத்தை அறிந்து கொண்டால் கட்டாயம் உணவில் இதை சேர்த்துக் கொள்வார்கள். இதன் மூலம் எண்ணற்ற பயன்கள் நமக்கு கிடைக்கும்.

கொள்ளில் ஒளிந்திருக்கும் மருத்துவ குணங்கள்

மனிதனின் தேவை இல்லாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைப்பதோடு மட்டுமல்லாமல் ஆண்களின் விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க கூடிய அற்புத சக்தி படைத்தது தான் இந்த கொள்ளு பருப்பு.

 இதனால் தான் கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு என்ற பழமொழி வந்தது.இதன் படி உடல் குண்டாக இருப்பவன் உடல் இளைக்க கொள்ளினை உணவில் சேர்க்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.

 சளியை தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல் இந்த கொள்ளு பருப்புக்கு இருப்பதால் பாரம்பரிய மருத்துவத்தில் ஆஸ்துமா, மூச்சுக் குழாய் சம்பந்தப்பட்ட வியாதிகள், சிறுநீரகப் பிரச்சனைகள், மஞ்சள் காமாலை, மூலநோய், மாதவிடாய் பிரச்சனைகளுக்கு இந்த கொள்ளு பொடியினை உணவோடு அல்லது தனியாகவோ மருந்தாக எடுத்துக் கொள்ள தந்தார்கள்.

 இந்தக் கொள்ளில் அதிக அளவு கால்சிய சத்து, பாஸ்பரச்சத்து, இரும்பு சத்து மற்றும் அமினோ அமிலங்கள் இருப்பதால் பெண்கள் கட்டாயம் தங்கள் உணவில் இதை சேர்த்துக் கொள்வதின் மூலம் 30 வயதிற்கு மேல் வரக்கூடிய எலும்பு தேய்மானம், எலும்பு சிதைவு பிரச்சனைகள் இருந்து பாதுகாத்துக் கொள்வதோடு இரத்த சோகை நோய்க்கும் ஆளாகாமல் இருக்கலாம்.

 கொள்ளு பருப்பில் இருக்கக்கூடிய பிளாவனாய்டு மற்றும் பாலி பினால்கள் கல்லீரல் மற்றும் பித்தப்பையின் செயல்பாடுகளை தூண்டுவதோடு உடலில் இருக்கும் கழிவுகளையும் வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

 தற்போதைய தலைமுறைக்கு சிறுநீரக கல் இல்லாதவர்களே இல்லை என்று கூறக்கூடிய அளவு சிறுநீரக கல் வியாதிகள் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் அன்றாட உணவில் இந்த கொள்ளு பருப்பை சேர்த்துக் கொள்வதின் மூலம் கால்சிய, பாஸ்பேட் உப்பு கடினமாகி சிறுநீரகங்கள் உண்டாகும் கற்களை நீக்க இந்த கற்கள் கடினம் ஆகுவதை தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல் கொள்ளுக்கு உள்ளது.

 ஒழுங்கற்ற மாதவிடாய் பாதிக்கப்பட்டு இருக்கும் பெண்கள் வாரம் இரு முறை கொள்ளை சேர்த்துக் கொள்வதின் மூலம் சீரான மாதவிடாயை பெற முடியும். அது மட்டுமல்லாமல் அல்சரை தடுக்கக்கூடிய செயல்பாடு இதற்கு உள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …