“சிவனுக்கு பிடித்த விளாம்பழம்..!” – இதில் இவ்வளவு நன்மைகளா..!

சிவபெருமானுக்கு பிடித்த பழங்களில் ஒன்றாக இந்த விளாம்பழத்தை கூறுவார்கள். மேலும் விளாம்பழத்தில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. இந்த விளாம்பழமானது யானைக்கு ஏற்படக்கூடிய மதத்தைக் கூட நீக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.

 அப்படிப்பட்ட விளாம்பழத்தை இந்த கோடை வெயிலில் சாப்பிடுவதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் நமக்கு கிடைக்கின்றது. அந்த விளாம்பழத்தை நாம் உட்கொள்ளும்போது என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பதை இந்த கட்டுரையை விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

விளாம்பழத்தை உட்கொள்ளும் போது கிடைக்கும் நன்மைகள்

மருத்துவ குணம் நிறைந்த இந்த விளாம்பழத்தை நீங்கள் உட்கொள்ளும் போது உங்கள் ஆற்றல் அதிகரித்து,சுறுசுறுப்பு ஏற்படும்.

 அதுமட்டுமல்லாமல் வெயிலின் தாக்கம் காரணமாக ஏற்படக்கூடிய நோய்களிலிருந்து நீங்கள் விடுதலை அடைய முடியும். விளாம்பழத்தில் உள்ள அதிகளவு ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உடலில் ஏற்படக்கூடிய அல்சர் மற்றும் மூல நோயை சரி செய்ய உதவி செய்கிறது.

உங்களுக்கு வயிற்றுப்போக்கு  ஏற்பட்டால் அதை சரி செய்வதோடு செரிமான பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாக்க மிகவும் சிறந்த பழமாக உள்ளது.

உடல் ஆரோக்கியத்தை காப்பதற்கு உதவக்கூடிய இந்த விளாம்பழம் உங்களுக்கு கிடைத்த கூடிய பட்சத்தில் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. இதுவும் ஒரு சீசனபுல் பழம் என்பதால் நீங்கள் கோடையில் எந்த பழத்தை உண்ணுவதை தவிர்க்க வேண்டாம்.

 சுவாசப் பிரச்சனைகளால் ஏற்படக்கூடிய நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தான விளாம்பழம் சுவாச நோயான ஆஸ்துமாவுக்கு மிகச்சிறந்த மருந்து அது மட்டுமல்லாமல் தொண்டை புண்ணை குணப்படுத்துவதில் ஆற்றல் கொண்டது.

 உடல் எடையை குறைக்க வேண்டும் என்று விரும்பக் கூடிய நபர்கள் அனைவரும் விளாம்பழத்தை எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிக அளவு இருப்பதால் உடல் எடை எளிதில் குறைவதோடு மலச்சிக்கல் அஜீரணம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது.

 இன்று சமுதாயத்தில் பலரின் வாழ்க்கையில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கு எந்த பழம் வரப்பிரசாதம் என்று கூறலாம். தினமும் காலையில் ஒரு விளாம்பழத்தை  நீங்கள் குடித்து வருவதன் மூலம் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு குறைவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

 மேலும் இது உடலை சுத்தப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சிறுநீரக நோயின் அபாயத்தை குறைக்க கூடிய ஆற்றல் இதற்கு உள்ளது. எனவே மறக்காமல் விளாம்பழம் உண்பதை உங்கள் குழந்தைகளுக்கும் நீங்கள் பழக்கி விடுவது அவர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …