பயன் தரும் மருத்துவ பழமொழிகள்.

பழமொழி என்றாலே பலர் பறந்து போய்விடுவார்கள். ஆனால் நமது முன்னோர்கள் பழமொழிகளில் அற்புதமான விசயங்களை மிகவும் சுருக்கமாக தருகிறார்கள் என்பது வியக்கத்தக்க வகையில் தான் உள்ளது.

 எல்லோரும் மிகவும் எளிமையான முறையில் இதை புரிந்து நடந்து கொண்டால் நாம் மருத்துவமனை போக வேண்டும் என்ற அவசியமே ஏற்படாது அந்த வகையில் மிக அழகாக குறிப்புகளை பழமொழிகள் விட்டுச் சென்றிருக்கிறார்கள் நமது முன்னோர்கள்.

அவற்றில் சில பழமொழிகளையும் அவற்றின் பயன்களையும் நாம் இக்கட்டுரையில் பார்க்கலாம்.

பழமொழிகள்

  1. ஆலும் வேலும் பல்லுக்குறுதி

ஆலன் குச்சி மற்றும் வேலன் குச்சியைக் கொண்டு பல் துலக்கும்போது பல் உறுதியாகும். பல்லில் இருக்கக்கூடிய பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் கொல்லப்படும்.

  1. கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு.

உடல் பருமன் அதிகமாக இருக்கக் கூடியவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் கொள்ளை உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து ஒல்லி ஆவார்கள். அதேபோல் உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வாரத்திற்கு இரண்டு நாள் எள்ளினை சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் எடை கூடும் கூடும்.

  1. தன் காயம் காக்க வெங்காயம்

 உடலில் உள்ள அனைத்து விதமான  நுண்கிருமிகள் ஆன பாக்டீரியாக்கள் வைரஸ்களின் தாக்குதல்களை தடுக்கக்கூடிய ஆற்றல் வெங்காயத்துக்கு உள்ளதால் இதை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நமது உடலை பாதுகாக்க முடியும் என்று கூறியிருக்கிறார்கள்.

    4.வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக

உடலில் பித்தம் அதிகரித்து விட்டால் அந்தத் திட்டத்தை நீக்க வில்வப்பழம் 9 திறப்பு அதேபோல் பசி எடுத்தல் அதிக அளவு இருக்கும் போது அதனை தடுப்பதற்காக பணம் பழத்தை உண்டால் போதுமானது என்பதே இந்த பழமொழியின் விளக்கம் ஆகும்.

  1. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்.

நாம் உண்ணக்கூடிய  உணவு பால் என்றாலும் அதை குறிப்பிட்ட நேரத்தில் எடுத்துக் கொள்வதால் தான் நன்மைகள் ஏற்படும் காலம் தவறி உணவு உண்பதால் உடலில் பல உபாதைகள் ஏற்படும் என்பதைத் தான் இவ்வாறு கூறியிருக்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …