“அகத்தை சீராக்கும் சீரகம்..!” உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

 பன்னெடுங்காலம் தொட்டு சீரகம் நமது சமையலறையில் ஆதிக்கம் செய்யக்கூடிய ஒரு அரும்பொருளாக உள்ளது. இது நாம் சமைக்கும் உணவிற்கு சுவையைக் கூட்டுவதோடு மட்டுமல்லாமல் பலவிதமான ஆரோக்கியப் பண்புகளைக் கொண்டிருப்பதால் தான் சீரகத்தை பல வழிகளில் நாம் உணவுப் பொருட்களில் ஒரு கூட்டுப் பொருளாக இணைத்து பல நோய்களை விரட்டி அடித்திருக்கிறோம்.

 அப்படிப்பட்ட சீரகத்தை நான் அன்றாட உணவு பழக்க வழக்கங்களில் சேர்த்துக் கொள்வதின் மூலம் என்னென்ன நன்மைகளை நாம் பெறுகிறோம் என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரைகள் தெரிந்து கொள்ளலாம்.

 சீரகத்தின் நற்பண்புகள்

👌வாயு தொல்லையால்  அவதிப்படுபவர்கள் அனைவருமே இந்த சீரகத்தை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது வயிற்றில் இருக்கக்கூடிய அமிலத்தன்மையை குறைக்க உதவி செய்கிறது.

👌 மேலும் ஜீரகத்தோடு சேர்த்து கொத்தமல்லியும் இணைத்து நீங்கள் சுடுநீரில் கலந்து நன்கு கொதிக்கவிட்டு குடிப்பதன் மூலம் 30 நிமிடங்களுக்குள் உங்கள் குடலில் ஏற்பட்டிருக்கும் அசிடிட்டியை இது குறைத்து விடுகிறது.

👌 வயிற்றுப்போக்கு சிரமப்படுபவர்கள் ஒரு ஸ்பூன் சீரகத்தை வறுத்து அதை தூளாக்கி அதனோடு பெருஞ்சீரகத்தையும் சேர்த்து தண்ணீரில் கலந்து மூன்று நான்கு முறை குடித்து வந்தால் வயிற்றுப் போக்கிலிருந்து எளிதில் விடுபட முடியும்.

👌 எப்படி இருந்தாலும் எனக்கு பசியே எடுக்கவில்லை என்று புலம்பித் தவிப்பவர்கள் வயிறு மந்தமாக இருக்கக்கூடிய சமயத்தில் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் அளவு சீரகத் தோலை சேர்த்து அதோடு மிளகுத்தூளையும் குறைந்த அளவு போட்டு குடித்த அரை மணி நேரம் கழித்துப் பார்த்தால் உங்கள் வயிறு லேசாவதோடு மட்டுமல்லாமல் பசியும் எடுக்கும்.

 👌பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படுகின்ற வயிற்று வலியையும், அடிவயிற்று வலியையும் குறைக்க ஒரு டீஸ்பூன் அளவு சீரகத்தோலை மோரில் கலந்து குடித்தால் போதும் வயிற்று வலி வயிற்றுப் பொருமல் மாதவிடாய் வலியை குறைக்க இது உதவி செய்கிறது.

👌எதை எப்படி சாப்பிட்டாலும் செரிமானமே ஆகவில்லை என்று புலம்பக் கூடியவர்களுக்கு செரிமான அமைப்பை வலுப்படுத்தி தரக்கூடிய ஆற்றல் எந்த சீரகத்துக்கு உள்ளதால் சீரக தண்ணீரை ரெகுலராக இவர்கள் குடிப்பதன் மூலம் செரிமான அமைப்பு வலுப்பெறுவதோடு வாயு சம்பந்தப்பட்ட உபாதைகளில் இருந்து உங்களை விடுவிக்கிறது.

👌இயற்கை மலம் மிளக்கியாக பயன்படும் எந்த சீரகத்தை நீங்கள் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் ஆசனவாயில் ஏற்படும் தொற்றுகள் மற்றும் காயங்களை குணப்படுத்த உதவுவதோடு மூலநோயை விரட்டியடிக்க கூடிய சக்தி இந்த சீரகத்திற்கு உள்ளது.

👌எளிதில் தூங்கமல் தூக்கம் வரவில்லை என்று கவலைப்படுபவர்கள் சீரகத்தில் உள்ள அத்யாவசிய பொருட்கள் உங்களுக்கு தூக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அமைப்பு இருப்பதால் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்க சீரகம் உதவி செய்கிறது.

அதுமட்டுமல்லாமல் தினமும் சீரகத்தை நீங்கள் தண்ணீரோடு கலந்து எடுத்துக் கொண்டால் போதும் உங்கள் தூக்கமின்மை பிரச்சனை எளிதில் நிவர்த்தியாகும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …