“உடலுக்கு வெந்தயம் செய்யும் மாயம்..!” – என்னென்ன மருத்துவ நன்மைகள் பார்க்கலாமா..!

வீட்டின் அஞ்சலரைப் பெட்டியில் இருக்கும் பொருட்களில் வெந்தயமும் ஒன்று. எந்த சமையல் என்றாலும் அதில் சிறிதளவு வெந்தயத்தை பயன்படுத்துவது நமது பாரம்பரிய முறை இதன் மூலம் எண்ணற்ற நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து வந்தோம்.

அப்படிப்பட்ட வெந்தயத்தில் என்னென்ன சத்துக்கள் உள்ளது .அதனால் ஏற்படுகின்ற மருத்துவ பலன்கள் என்ன என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

வெந்தயத்தில் இருக்கும் சத்துக்கள்

வெந்தயத்தில் வைட்டமின் சி அதிக அளவு உள்ளது. அதுமட்டுமல்லாமல் இதில் நார்ச்சத்து, நியாசின், புரதம் போன்றவை உள்ளது. கூடுதலாக பொட்டாசியம், மெக்னீசியம் மாங்கனீஸ் மற்றும் இரும்பு சத்துக்களும் இதில் உள்ளது. குறிப்பாக இதில் டையோஸ்ஜெனின் என்ற சேர்மம் உள்ளது.

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய கடுமையான உஷ்ணம் மற்றும் வயிற்று வலியை நீக்கக்கூடிய சக்தி இந்த வெந்தயத்திற்கு உள்ளது. இதற்காக அவர்கள் மாதவிடாய் காலங்களில் முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டால் சூடு தணிவதோடு வெள்ளைப்படுதல், மாதவிடாய் வலி போன்றவை ஏற்படாது.

ஜீரணக் கோளாறு காரணமாக சிரமத்தில் இருப்பவர்கள் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இது உங்களது செரிமான பிரச்சனையை தீர்ப்பதோடு வாயு தொல்லையிலிருந்தும் விடுதலை அளிக்கும்.

தலைமுடி வளர்ச்சிக்கு வெந்தயம் பெருமளவு உதவி செய்கிறது. வெந்தயத்தை நன்கு அரைத்து தலையில் தேய்த்து குளிப்பதின் மூலம் உங்களுக்கு இருக்கும் கூடுதல் உஷ்ணம் குறைவதோடு முடியின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும். முடி உதிர்வதை தடுக்கக்கூடிய ஆற்றல் இதற்கு உண்டு.

சூடு காரணத்தால் ஏற்படுகின்ற சீதபேதியை தடுத்து நிறுத்த கூடிய அற்புத மருந்தாக வெந்தயம் திகழ்கிறது .வெந்தயத்தை நீரில் ஊற வைத்தோ அல்லது வறுத்து பொடித்தோ நீங்கள் குடிப்பதின் மூலம் உங்கள் சீதபேதி விரைவில் நிற்கும்.

ரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த வெந்தயம் மிகவும் முக்கியமான பணியை செய்கிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து,கார்போஹைட்ரேட் அளவை குறைத்து ரத்தத்தின் சர்க்கரை அதிகரிப்பதை தடுக்கிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் தினமும் வெந்தயத்தை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

உடலில் புண் இருப்பவர்கள், தொண்டை மற்றும் வயிற்றில் புண் இருப்பவர்கள் இந்த வெந்தயத்தை பொடித்து சாப்பிடுவதின் மூலம் புண்கள் குணமாகும். இருமல், தொண்டை கரகரப்பு போன்றவற்றை நீக்கக்கூடிய ஆற்றல் இந்த வெந்தயத்திற்கு உள்ளது.

தோல் நோய்களான சொறி, சிரங்கு போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரினியாக திகழக்கூடிய இந்த வெந்தயத்தை நீங்கள் அரைத்து எந்த பகுதியில் சொறி உள்ளதோ அந்த பகுதியில் தடவி விட அரிப்புகளும் சொறியும் மறைந்து போகும்.

உடலில் தேங்கியுள்ள கழிவுகளை நீக்கக்கூடிய ஆற்றல் படைத்த இந்த வெந்தயத்தை ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிக அளவு உள்ளதால் இது உங்கள் செரிமானத்தை தூண்டிவிடும்.

கொழுப்பை கரைக்கக் கூடிய ஆற்றலும் இதற்கு உள்ளதால் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அவர்களின் டயட்டில் வெந்தயத்தை சேர்த்துக் கொள்ளலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …