“முடக்குவாதம் நீக்கும் முகக்கத்தான் கீரை..!” – அதிசய பயன்கள் என்ன என்ன தெரிந்து கொள்ளலாமா?

முடக்கத்தான் கீரை வாத நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கிறது. இந்தக் கீரையில் அதிக அளவு விட்டமின்கள் தாதுப்புக்கள் உள்ளது. இது சாதாரணமாக கிராமப்புறங்களில் இருக்கும் வேலிகளில் படர்ந்து வளரக்கூடிய தன்மை கொண்டது. நரம்புத் தளர்ச்சிகளுக்கு அற்புதமான மருந்தாக விளங்கக்கூடிய  இந்தக் கீரை எலும்புகளின் வளர்ச்சிக்கு அதிகமாக துணை புரிகிறது.

முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்து உண்பதன் மூலம் மலச்சிக்கல், மூல நோய்கள், கரப்பான்,பாத வாதம்  போன்ற நோய்கள் குணமாகும்.

நீங்கள் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போது இடுப்பு பாதம் கை, கால் முட்டிகளில் அதிக வலி இருக்கும். இதை ருமாட்டாயிட் ஆர்த்ரைட்டிஸ்  என்று கூறுவார்கள். இது தற்போது 65 சதவீதமான மக்களுக்கு ஏற்படுவதால் இந்த கீரையை உணவில் வாரம் ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை சேர்த்துக் கொள்வதின் மூலம் இந்த பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

 வாயு தொல்லையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் இந்தக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் வாயு தொல்லை ஏற்படாது. மேலும் மாதவிடாய் நிற்கக்கூடிய நிலையில் இருக்கக்கூடிய உங்களுக்கு உகந்த ஊட்டச்சத்துக்களை எந்த கீரை கொடுப்பதால் அதிகளவு உணவில் எடுத்துக் கொள்ளலாம்.

உங்கள் மூட்டுகளில் யூரிக் ஆசிட் எந்த பகுதியில் தங்கி இருந்தாலும் அதை கரைத்து சிறுநீர் வழியாக வெளியேற்றி வரக்கூடிய தன்மை இந்த முடக்கத்தான் கீரைக்கு உள்ளது.

 இதனை மருந்தாக உட்கொள்ளாமல் உண்ணும் ஒரு உணவிலேயே இந்தக் கீரையை சாப்பிடலாம். இந்தக் கீரையை துவரம் பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பருப்புகளோடு கலந்து உண்ணலாம்.

 மேலும் அதில் இருக்கும் இளம் கசப்பு உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் சிறிது வெல்லம் சேர்த்து நெய்யில் வணக்கி உட்கொள்ளும் போது உங்களுக்கு கண் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படாது.

 முடக்கத்தான் தோசையை 15 நாட்கள் ஒருமுறை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அல்சரால் அவதிப்படுபவர்கள் தினமும் இந்த கீரை சாறுனை பருகுவதின் மூலம் அல்சர் நோயிலிருந்து விடுதலை பெறலாம்.

மேலும் புற்றுநோய் வராமல் தடுக்க உதவக்கூடிய ஆன்ட்டி கேன்சர் பண்புகள் இதில் அதிக அளவு உள்ளது. ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிக அளவு நிறைந்துள்ள இந்தக் கீரையை நீங்கள் உணவில் சேர்த்து தினமும் உண்டு வர இளமையோடு வாழ்வதற்காக இந்தக் கீரை உதவி செய்யும். இதற்கு காரணம் இதில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்கள் உடலில் உள்ள செல் அழிவு ஏற்படாமல் தடுக்க உதவி செய்கிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …