“பெண்களுக்கு உகந்த பவள மல்லி..!” அற்புத நன்மைகள் என்ன என்ன தெரியுமா?

பெண் குழந்தைகளை பொருத்தவரை  அவர்களின் வளர்ச்சி மிகவும் அதிக அளவு இருக்கும். மேலும் இவர்களின் குழந்தை பருவம் இளமைப் பருவம் முதுமைப் பருவம் என்று எல்லா பருவத்திற்கும் ஏற்ற வகையில்  அவர்களின் உடல்நிலைக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய மூலிகைகளில் ஒன்று தான் பவளமல்லி.

இந்த பவளமல்லி செடியில் பூக்கும் பூவை பாரிஜாத மலர் என்று கூறுவார்கள். கடவுளுக்கு அர்ச்சனை செய்வதில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் இந்த மலரானது வெள்ளை மற்றும் இதன் காம்பு சிவப்பு நிறத்தில் அதாவது பவளத்தை ஒத்து இருப்பதால் பவளமல்லி என்று அழைக்கப்படுகிறது.

பெண்களுக்கு உகந்த பவளமல்லியின் மருத்துவ குணங்கள்

தீராத இடுப்பு வலியால் கஷ்டப்படக் கூடிய பெண்கள் இந்த பவளமல்லியின் இதழ்களை கசாயம் வைத்து குடிப்பதின் மூலம் இடுப்பு வலிக்கு விரைவில் நிவாரணம் பெற முடியும். மேலும் இந்த கசாயத்தை வெறும் வயிற்றில் காலை மற்றும் மாலை நேரங்களில் எடுத்துக் கொள்வது உஜிதமாக இருக்கும்.

இன்று இருக்கும் இளம் தலைமுறை குழந்தைகள் அனைவரும் ஐஸ்கிரீமை விரும்பி உண்பதால் அவருக்கு அவர்களுக்கு சிறு நாக்கு வளர்ச்சி விரைவில் ஏற்பட்டு அதனால் பாதிப்புகள் ஏற்படும். இந்த உள்நாக்கு வீக்கத்தை குறைக்கக்கூடிய ஆற்றல் எந்த பவளமல்லியின் வேருக்கு உள்ளதால் இந்த வேரை சிறிதளவு எடுத்து நன்கு மென்று துப்பினாலே வீக்கம் குறைந்து மிக விரைவில் குணமாகும்.

டான்சில்-லால் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறி இருக்கக்கூடியவர்கள் இந்த டிப்ஸை ஃபாலோ செய்தால் கட்டாயம் ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலையிலிருந்து விலகிப் போகக் கூடிய வாய்ப்பு உருவாகும்.

பவள மல்லியின் இலைகள் தலையில் ஏற்படக்கூடிய புழுவெட்டுக்கு மிகச்சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இந்த இலைகளை நன்கு அரைத்து உங்கள் தலையில் ஒரு ஹேர் மாஸ்க்காக பயன்படுத்தினால் போதும் உங்கள் தலையில் இருக்கக்கூடிய புழுவெட்டு மறைந்து தலைமுடி நன்றாக வளரும்.

குழந்தைகளின் வயிற்றில் புழுக்களால் பிரச்சனைகள் ஏற்படும். அத்தகைய குழந்தைகளுக்கு பவளமல்லி பூவின் சாறை கசாயமாக கொடுப்பதன் மூலம் கீரிப்புழு, கொக்கி புழு, நாடாப்புழு மற்றும் நுண்கிருமிகள் வயிற்றிலிருந்து வெளியேறி வயிறு சுத்தமாகும்.

இன்று ஆண், பெண் இருவருக்கும் இருக்கக்கூடிய பொடுகு தொல்லையை நீக்கக்கூடிய சக்தி பெற்ற இந்த பவளமல்லி இலை சாரினை நீங்கள் உங்கள் தலையில் தேய்த்து குளிப்பதின் மூலம் பொடுகு பிரச்சனை தீரும். மேலும் பவளமல்லி பூவை பெண்கள் சூடுவதால் தலை முடிக்கு குளிர்ச்சி கிடைப்பதோடு பொடுகு, இளநரைப் பிரச்சனைகள் சரியாகும்.

பல் ஈறுகளில் ஏற்படக்கூடிய ரத்தப்போக்கு மற்றும் பல் சம்பந்தப்பட்ட வியாதிகளை தீர்க்கக்கூடிய தன்மை பவளவல்லி மரத்தின் வேர்களுக்கும் உள்ளதால் அவற்றை சேகரித்து சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக்கி, பொடி செய்து பல் தேய்த்து வருவதன் மூலம் பல் பிரச்சனைகள் நீங்கும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …