“அட.. வெள்ளை தும்பை பூவில் இம்புட்டு மருத்துவ பயன்களா..? என்ன என்ன என படிக்கலாமா?

மழைக்காலம் துவங்கி விட்டால் பச்சை பசேல் என்று வெள்ளை நிறத்தில் பூத்துக் குலுங்கும் தும்பை பற்றி உங்களுக்கு தெரியுமா?  ஆரம்ப நாட்களில் இந்த தும்பை பூவை எடுத்து பிள்ளையாருக்கு வைத்து பூஜை செய்வதின் மூலம் பல நன்மைகள் கிடைக்கும் என்று நினைத்தார்கள்.

அப்படிப்பட்ட தும்பை பூவில் இருக்கக்கூடிய மருத்துவ குணங்களை கூறினால் நீங்கள் ஆச்சரியம் அடைவீர்கள்.

தும்மைப் பூவின் மருத்துவ குணங்கள்

👌சைனஸ் பிரச்சனைக்கு மிகச்சிறந்த மருந்தாக இந்த தும்பை பூ விளங்குகிறது. இந்த தும்பை பூ சாறை சம அளவு எடுத்து காலை, மாலை உங்கள் மூக்கில் இரண்டு சொட்டு விட்டு வர உங்கள் சைனஸ் பிரச்சனை விரைவில் தீரும்.

👌தலைவலி அதிகமாக இருக்கிறது. என்ன செய்தும் தலைவலி, சளி எனக்கு நீங்கவில்லை என்று நினைப்பவர்கள் தும்பைப் பூவை நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து வெந்நீரில் குளித்தால் தலைபாரம் நீங்குவதோடு சளி மற்றும் தலைவலி எளிதில் நீங்கும்.

👌சருமங்களில் ஏற்படும் சொறி, சிரங்கு அதனால் ஏற்படக்கூடிய நமைச்சலை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் தும்பை பூவின் சாறுக்கு உள்ளது. இந்த தும்பை பூவின் சாறோடு சிறிதளவு உப்பு சேர்த்து மையாக அரைத்து சொறி, சிரங்கு இருக்கக்கூடிய பகுதிகளில் போட்டு குளித்து வந்தால் விரைவில் குணமாகும்.

👌குழந்தைகளுக்கு தொண்டையில் கட்டி இருக்கக் கூடிய கோழையை அகற்றுவதில் தும்பை பூ அற்புத ஆற்றல் கொண்டது என்று கூறலாம். 25 தும்பை பூவை அரை டம்ளர் பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி கொடுத்தால் கட்டிய கபம் கோழை அனைத்தையும் வெளியே இழுத்து வந்து தள்ளக்கூடிய சக்தி இந்த தும்பை பூவிற்கு உள்ளது.

👌 தொடர் விக்கலால் அவதிப்படுபவர்கள் என்ன செய்தும் இந்த விக்கல் தீரவில்லை என்பவரும், மருத்துவரை அணுகியும் எனக்கு விக்கல் பிரச்சினை தீரவில்லை என்று கூறுபவர்கள் விக்கலை நீக்குவதற்காக தும்பை பூவை பசும்பாலில் போட்டு அப்படியே குடித்துவிட்டால் விக்கல் நின்றுவிடும். இல்லையென்றால் அந்த பூவை அரைத்து கலந்தும் குடிக்கலாம்.

👌குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடுமையான சளியால் பாதிக்கப்பட்டு மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படும் போது நன்கு கொதிக்க வைத்த நீரில் தும்பை பூவை போட்டு அப்படியே நீங்கள் ஆவி பிடிப்பதன் மூலம் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

 இன்னும் சில கிராமப்புறங்களில் தும்பை பூவை நெய்யில் வதக்கி உணவோடு கலந்து உண்ணக்கூடிய பழக்கம் உள்ளது. நீங்களும் இதுபோல மாதத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு சுவாச சம்பந்தமான கோளாறுகளில் இருந்து நிவர்த்தி கிடைக்கும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …