மருத்துவப் பயன்கள் நிறைந்த வேப்பிலை.

வேப்பிலையின் இலைகள் கோழையகற்றுதல், சிறுநீர் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்தல், வாதம், மஞ்சள் காமாலை காய்சல், சுவையின்மை, பித்தம்,கபம், நீரிழிவு, தோல் வியாதிகளை நீக்கும் அருமருந்தாக பயன்படுகிறது.

வேப்பங்கொழுந்தும் அதிமதுரப்பொடியும் சமன் சேர்த்து நீர் விட்டு அரைத்துப் பட்டாணி அளவு மாத்திரை போல் செய்து நிழலில் உலர்த்தி நாள் தோறும் 3 வேளை ஒரு மாத்திரை வீதம் சாப்பிட்டு வர அம்மை நோய் தணியும் . 

வேப்பங்கொழுந்து 20 கிராம் 4 கடுக்காய் தோல் பிரண்டைச் சாறு விட்டரைத்து அரை அவுன்ஸ் விளக்கெண்ணெய் கலந்து கொடுக்கக் குடல் பூச்சிகள் வெளியேறும்.

வேப்பம் இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்துத் தடவி வரப் பொன்னுக்கு வீங்கி, பித்த வெடிப்பு, கட்டி பரு, அம்மைக் கொப்புளம் ஆகியவை குணமாகும். 

உத்தாமணி இலையை வேப்பெண்ணையில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுக்க நரம்பு இசிவு, கரப்பான், சொறி, சிரங்கு, சுரம், சன்னி, கீல்வாதம் குணமாகும். 

வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் முகப்பரு சரியாகும். 

வேப்பிலைக் கசாயம் கிருமிகளைக் கொன்று காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. தினமும் காலை வேளையில் பத்து வேப்பிலைக் கொழுந்து எடுத்து ஐந்து மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிட்டால் மலேரியாக் காய்ச்சல் குணமாகும்.

 நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டு வர மாத்திரை ஏதுமின்றி  ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

கார்த்திகை மாதம் வருகின்ற வேப்பிலைக் கொழுந்தை 27 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர பாம்பு விடம் நீங்கும் பாம்பு கடித்தாலும் விடம் ஏறாது ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் பதினெட்டு வகையான குட்டமும் குணமாகும். 

வேப்பிலையில் நார்ச்சத்து மாவுச்சத்து மற்றும் புரதச் சத்து 10 விதமான அமினோ அமிலங்கள் உள்ளது. வயிற்று புண்களை ஆற்றக் கூடிய தன்மை விற்பனைக்கு உள்ளது வயிற்றில் அதிகமாக சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை மட்டுப்படுத்தும் தன்மை வேப்பிலைக்கு உண்டு. 

சூழ்நிலைக்கு ஏற்ப உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் வராமல் தடுக்கக்கூடிய ஆற்றல் வேப்பிலைக்கு உண்டு. 

புற்றுநோய் எதிர்ப்பு தன்மை வேப்பிலைக்கு உண்டு இதனால் புற்றுநோய் வளர்ச்சியைத் தடை செய்யப்பட்ட கூடிய மருந்துகளில் வேப்பிலை பெரும்பங்கு வகிக்கிறது. 

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …