மீனா குடும்பத்தினர் அன்பில் நெகிழ்ந்த கலா மாஸ்டர் 

தமிழ் சினிமாவில், முன்னனி நடிகையாக வலம் வந்தவர் மீனா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா, 1990களில், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்தவர். ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என, முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்.

தமிழ் சினிமாவில் சிறந்த நடன இயக்குநர்களில் கலா மாஸ்டரும் ஒருவர். இவரது தங்கை பிருந்தாவும் நடன இயக்குநர்தான். பல நூறு படங்களில் கலா மாஸ்டர், நடன இயக்குநராக பணிபுரிந்தவர் என்பதால், ராதா அம்பிகா முதல், இன்றுள்ள கீர்த்தி சுரேஷ் வரை, அவர் ஆட்டி வைக்காத நடிகைகளே இல்லை எனலாம்.

ஆனால் அவர்களில்,  கலா மாஸ்டருக்கு மிக நெருக்கமானவர் மீனா. மீனா, கலா இருவரும் ஒருவருக்கு ஒருவர் குடும்ப உறுப்பினர்களை போல, அன்பை பரிமாறிக் கொள்பவர்கள். சமீபத்தில் மீனாவின் கணவர் வித்யாசாகர் இறந்த போது, மீனாவுடன் முழு நேரமும் ஆதரவாக இருந்து, அவரை அரவணைத்தவர் கலா மாஸ்டர்தான்.

இந்நிலையில், நடிகை மீனா வீட்டில், கலா மாஸ்டர் தனது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். மீனா, அவரது மகள் நைருனிகா, மீனாவின் அம்மா ஆகிய மூவருடன் கலா மாஸ்டர் கேக் வெட்டி, தனது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.

மீனா குடும்பத்தின் அன்பில் நெகிழ்ந்து போன கலா மாஸ்டர், தனது முகநூல் பக்கத்தில் அந்த புகைப்படங்களை பகிர்ந்து, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …