நடிகை மீனா-வுக்கு இரண்டாவது திருமணம்..! – மாப்பிள்ளை யாருன்னு பாருங்க..!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை மீனா. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் இவர் பல வெற்றி படங்களில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போதும் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார் சில சீரியல்களிலும் கூட நடித்திருக்கும் இவர் தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் நடிகை மீனாவின் கணவரான வித்யாசாகர் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்த இழப்பினால் மனம் நொந்து போயிருந்த நடிகை மீனாவை அவருடைய சினிமா தோழிகள் நேரடியாக சந்தித்து அவருடைய வீட்டிலேயே சில நாட்கள் தங்கி அவரை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்து இருக்கின்றனர்.

தற்பொழுது கணவர் இறந்த சோகத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்திருக்கும் நடிகை மீனா விரைவில் இரண்டாவதாக ஒரு நபரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதுகுறித்து, அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. நடிகை மீனாவை ஒரு பேட்டியில் இந்த தகவல் குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்து இருந்தார் பலரும் என்னை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள சொல்கிறார்கள்.

எனக்கும் என்னுடைய மகளுக்கும் அதுதான் பாதுகாப்பாக இருக்கும் என்கிறார்கள். ஆனால், எனக்கு அப்படியான எண்ணம் எதுவுமே தற்போது வரை இல்லை. எனது இரண்டாவது திருமணம் என்று வெளியாகும் தவறுகள் தகவல்களில் உண்மை இல்லை என்று பேசியிருக்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க நடிகை மீனா அவருடைய நீண்ட நாள் நண்பர் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவரும் தொழிலதிபருமான அவர் ஏற்கனவே திருமணமாகி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரைத்தான் நடிகை மீனா இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் அடுத்த சில மாதங்களில் இவருடைய திருமணம் குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version