விவாகரத்தான GOAT பட நடிகருடன் நடிகை மீனா திருமணம்..? தீயாய் பரவும் தகவல்கள்..!

சிறுவயதிலேயே தமிழ் சினிமாவில் அறிமுகமான ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை மீனா. நெஞ்சங்கள் என்கிற திரைப்படம் மூலமாக முதன்முதலாக இவர் சிறுமி கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து சிறுவயதிலேயே அவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அவற்றில் அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படம் முக்கியமான திரைப்படமாகும். அந்த திரைப்படத்தின் மூலமாக சிறு வயதிலேயே இவருக்கு கொஞ்சம் வாய்ப்புகள் கிடைத்தது.

தொடர்ந்து அடுத்த நான்கு வருடத்தில் கதாநாயகியாக களம் இறங்கினார் மீனா. என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் சோலையம்மா என்கிற கதாபாத்திரம் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் மீனா.

மீனாவின் எண்ட்ரி:

மீனாவின் தனிப்பட்ட நடிப்பின் காரணமாக அவருக்கு வரவேற்பு கிடைத்தது. ஏனெனில் சோலையம்மா என்கிற கதாபாத்திரம் திருமணம் ஆகி கர்ப்பமாக இருக்கும் ஒரு கதாபாத்திரமாக இருந்தது. அந்த கதாபாத்திரத்திற்கான மெச்சூரிட்டி என்பது அப்பொழுது மீனாவிற்கு கிடையாது.

ஏனெனில் அவருக்கு அப்பொழுது 16 வயதுதான் ஆகியிருந்தது. இருந்தாலும் அந்த கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்திருந்தார் மீனா தொடர்ந்து மீனாவிற்கு நிறைய திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

ரஜினிகாந்த் கமலஹாசன் மாதிரியான முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்தார் மீனா. இதனால் மீனாவிற்கு என்று ஒரு தனி ரசிக்கப்பட்டாளம் உருவானது. அதே சமயம் தெலுங்கு சினிமாவிலும் வரவேற்பை பெற்ற ஒரு நடிகையாக மீனா இருந்தார்.

தெலுங்கிலும் வரவேற்பு:

வருடத்திற்கு மூன்று நான்கு திரைப்படங்கள் தமிழில் நடித்தாலும் ஒரு திரைப்படமாவது தெலுங்கில் நடித்து வந்தார் மீனா. முக்கியமாக நடிகர் சத்யராஜுடன் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சூரியவம்சம் திரைப்படத்தை தெலுங்கில் எடுத்த பொழுது அதில் தேவயானி கதாபாத்திரத்தில் மீனாதான் நடித்திருந்தார்.

சில காலங்களுக்குப் பிறகு மீனா திரைத்துறையில் இருந்து விலகினார் 2006க்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகளும் குறைவாகதான் கிடைத்து வந்தன. இந்த நிலையில் அவ்வப்போது துணை காபாத்திரங்களில் நடித்து வந்த மீனா பிறகு பெரிதாக திரைப்படங்களில் நடிப்பதையே விட்டு விட்டார்.

இருந்தாலும் கூட அவருக்கு வாய்ப்புகள் என்பது வந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் மீனாவிற்கு முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில் தற்சமயம் மீண்டும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

யாரை இவர் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று பார்க்கும் பொழுதே நடிகர் பிரசாந்த் அவர்களைதான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று கூறப்படுகிறது. திருமண வாழ்க்கையை பொருத்தவரை நடிகர் பிரசாந்திற்கு அவ்வளவாக சிறப்பான திருமண வாழ்க்கை அமையவில்லை.

அதனை தொடர்ந்து இந்த திருமண வாழ்க்கையாவது அவருக்கு நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களும் இதுவரை வெளிவரவில்லை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version