இந்த நடிகரின் அண்ணனை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்… நடிகை மீனா ஓப்பன் டாக்..!

ரஜினி அங்கிள் என்று பாசத்தோடு ரஜினியை அழைத்த நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் நடிக்க ஆரம்பித்தார். தென்னிந்திய மொழிகளில் நடித்து அசத்தியவர்.

சிவாஜி கணேசன் நடிப்பில் வெளி வந்த நெஞ்சங்கள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.

நடிகை மீனா..

நடிகை மீனா எட்டாம் வகுப்பு வரை சென்னையில் உள்ள வித்யோதயா பள்ளியில் படித்திருக்கிறார். சிறு வயதிலேயே திரைப்படங்களில் நடித்ததை அடுத்து தொடர்ந்து கல்வி பயில முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனினும் 10-ம் வகுப்பை தனியார் பயிற்சியுடன் படித்து எழுதி தேர்ச்சி அடைந்தார்.

அத்தோடு சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு பட்டப்படிப்பை திறந்த வெளி பல்கலைக்கழகத்தில் படித்த இவர் தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.

இவர் நடிப்பில் வெளி வந்த அவ்வை ஷண்முகி, தாய் மாமன், ரிதம், பெரியண்ணா, பொற்காலம், பாளையத்தம்மன், பாரதி கண்ணம்மா, வானத்தைப் போல, வெற்றி கொடி கட்டு போன்ற படங்கள் இன்றும் ரசிகர்களின் மத்தியில் சிறப்பாக பேசப்படுகிறது.

மீனாவுக்கு அந்த நடிகரின் அண்ணனை தான் பிடிக்கும்..

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் மீனா பேசும் போது இவர் திரைப்படங்களில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்து நின்று ரசிகர்களின் மனதை கவர்ந்ததார். அதை சிறப்புக்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடை பெற்றது.

அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற நடிகை மீனா அவரோடு இணைந்து நடித்த நடிகைகள் மற்றும் நடிகர்கள் பற்றியும் அவர்கள் மீனாவை பற்றியும் சிறப்புரை ஆற்றி இருந்தார்கள்.

அந்த வகையில் மீனாவைப் பற்றி நடிகரும் நடன ஆசிரியருமான பிரபுதேவா பேசும் போது மீனாவை தனக்கு 30 வருடமாக தெரியும். இவர் மிகச்சிறந்த நண்பர் எப்படி எங்களுக்குள் பிரண்ட்ஷிப் ஏற்பட்டது என்று தெரியவில்லை என கூறினார்.

ஓப்பன் டாக்..

மேலும் மீனா இது பற்றி பேசும் போது தனக்கு பிரபுதேவாவை விட அவரது அண்ணனை தான் மிகவும் பிடிக்கும் என்று சொன்ன விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பெங்களூருவை சேர்ந்த மென்பொறியாளரை திருமணம் செய்து கொண்ட மீனா கொரோனா தொற்று காரணமாக 2022-ஆம் ஆண்டு அவரது கணவரான வித்தியாசாகர் பறிகொடுத்த நிலையில் தற்போது அந்த மன அழுத்ததிலிருந்து மீண்டு வருகிறார்.

இவரைப் போலவே இவரது மகளையும் குழந்தை நட்சத்திரமாக தெறி யப் அறிமுகம் செய்ததை அடுத்து தற்போது மீண்டும் திரைப்படங்களிலும் சின்ன திரைகளிலும் தலைகாட்ட ஆரம்பித்து இருக்கக்கூடிய நிலையில் பிரபுதேவாவின் அண்ணன் தான் பிடிக்கும் என்று சொன்ன பேச்சு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version