நடிகை மீனா கூட 5 பேர் சேர்ந்து.. மோகன்லால் ராதிகா LEAKED AUDIO…! அட்ஜெஸ்ட்மெண்ட் லீலைகள்..!

ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகையும் அதிர வைத்துக் கொண்டிருக்கிறது மலையாள திரை உலகில் அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டியின் அறிக்கை.

இத்தனைக்கும் இந்த கமிட்டியின் அறிக்கை முழுமையாக வெளியாகவில்லை. சில பக்கங்கள் இணையத்தில் கசிந்து இருக்கிறது அவ்வளவுதான். அந்த கசிந்த பக்கங்களே கேரள நடிகர் சங்கத்தை கூண்டோடு கலைத்துவிட்டு துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓட வைத்துவிட்டது.

இன்னும் முழுமையான அறிக்கை வெளியானால் என்னென்ன கலேபரங்கள் நடக்குமோ என்று இந்த அறிக்கையின் மீது பார்வையை வைத்திருக்கிறார்கள் சினிமா ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள்.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ராதிகா கேரவனில் கேமரா வைக்கிறார்கள் என்று பேசியிருந்தார். இது குறித்து அவர் கூறியதாவது, ஒரு மலையாள படத்தில் நான் நடித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது படப்பிடிப்பு தளத்தில் நான் ஒரு இடத்தை கடந்து சென்ற பொழுது சில பேர் செல்போனை பார்த்து கும்பலாக சிரித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன மொழி பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.

அங்கே தமிழ் பேசக்கூடிய ஒருவர் இருந்தார் அவரை அழைத்து என்ன விஷயம் என்று கேட்டேன். அதற்கு அவர் கேரவனில் பெண்கள் உடை மாற்றும் வீடியோவை அவர்கள் வைத்திருக்கிறார்கள். அதனை பார்த்து தான் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள் என கூறினார்.

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. உடனே அவர்களை அழைத்து அவர்களுடைய போனில் உள்ள வீடியோவை டெலிட் செய்யுமாறு கூறினேன். இந்த சம்பவம் நடந்தது இதனை ஹேமா கமிட்டியில் இருந்து எனக்கு போன் செய்தபோது நான் கூறியிருந்தேன்.

ஆனால் இது மேற்கொண்டு நான் எதுவும் புகார் எதுவும் கொடுக்கவில்லை. இதனை தொடர்ந்து நடிகர் மோகன்லால் எனக்கு போன் செய்தார். என்னுடைய படப்பிடிப்பு தளத்தில் இப்படியான விஷயம் நடந்ததா..? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு நான்.. சார் நான் உங்களுடைய பெயரையோ அல்லது வேறு யாரு பெயரையும் நான் இதில் கூறவில்லை. மலையாள படம் ஒன்றில் இப்படி நடந்தது என்று தான் கூறினேன் மேற்கொண்டு நான் புகார் கொடுக்கவில்லை. இதனால் என்னை விசாரிக்க ஹேமா கமிட்டியில் இருந்து யாரும் அழைக்கவில்லை.

ஒருவேளை புகார் கொடுத்து இருந்தால் தானே என்னை விசாரிக்க அழைப்பார்கள் என்று கூறி போனை வைத்து விட்டேன் என கூறியிருந்தார்.

இந்நிலையில் பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய பேட்டி ஒன்றில் கேரவனில் கேமரா வைப்பார்களா..? என்று கேட்டால் கண்டிப்பாக கிடையாது. மலையாள படம் ஒன்றில் நான் நடித்துக் கொண்டிருந்தேன்.

அந்த நேரத்தில் நடிகை மீனா அவ்வை சண்முகி படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அவரும் மலையாள படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தார். மீனா படப்பிடிப்புக்கு வந்தால் அவருடன் ஐந்து பேர் சேர்ந்து வருவார்கள்.

மேக்கப் மேன், காஸ்ட்யூம் டிசைனர், உதவியாளர் என ஐந்து பேர் கூடத்தான் வருவார் நடிகை மீனா. படக்குழு சார்பில் ஒரே ஒரு மேக்கப் ஆர்ட்டிஸ்ட் மட்டும் மீனாவுக்கு கொடுப்பார்கள்.

கேரவனில் கேமரா இருக்கிறது என்று கூறினால் நடிகை மீனா பார்க்க தவறி இருப்பார். ஆனால் அவரிடம் இருந்த 5 பேர் அதை கவனிக்காமல் இருந்திருப்பார்களா..? கண்டிப்பாக அந்த விஷயம் தெரிந்திருக்கும். பெரிய பிரச்சினையாகிவிடும்.

குறிப்பாக அந்த கேரவன் வைத்திருக்கக்கூடிய உரிமையாளருக்கு மிகப்பெரிய பிரச்சினையாகிவிடும். இதனால் கேமராவை கேரவேனில் யாரும் வைக்க மாட்டார்கள். ஏன் உறுதியாக கூறுகிறேன் என்றால் நிறைய நடிகைகளை நான் கேரவேனுக்குள் சென்று பேட்டி எடுத்திருக்கிறேன்.

நடிகராக இல்லாமல் பத்திரிகையாளராக கேரவேனுக்குள் சென்று அவர்களை நான் பேட்டி எடுத்திருக்கிறேன். அவருடைய அனுபவங்களை நான் கேட்டு இருக்கிறேன்.

ஆனால் அந்த கேரவனில் கேமரா எதுவும் இருக்காது. நானும் பல நடிகைகளிடம் விசாரித்து இருக்கிறேன். அப்படி எதுவும் இருக்காது. ஆனால், படப்பிடிப்பு தளத்திற்கு கேரவன் வந்த பிறகு யாராவது திருட்டுத்தனமாக கேமராவை வைத்திருந்தால் வேண்டுமென்றால் இது நடக்கும் என பதிவு செய்திருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version