என் வாழ்க்கையில் செஞ்ச பெரிய தப்பு.. 25 ரகசியத்தை உடைத்து கதறும் நடிகை மீனா..!

திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ரஜினி ஆங்கிள் என்று அழைத்த குழந்தை நட்சத்திரம் மீனா வளர்ந்து பெரியவளாகி சூப்பர் ஸ்டாரோடு கதாநாயகியாக இணைந்து நடித்த பெருமை இவருக்கு உண்டு.

நடிகை மீனா தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து தனக்கு என்று ஒரு மிகப்பெரிய ரசிகர் படையை வைத்திருக்கிறார்.

நடிகை மீனா..

நடிகை மீனாவின் கண்ணழகுக்கு மயங்காத ரசிகர்களை இல்லை என்று சொல்லக்கூடிய அளவு மீனாவை கண்ணழகி என்று பலரும் அழைத்து வந்தார்கள். தனது அற்புத நடிப்பால் அனைவரையும் கவர்ந்த மீனா தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப குத்தாட்டம் போட்டு அனைவரையும் கவர்ந்த நடிகை மீனா பற்றி உங்களுக்கு அதிக அளவு பகிர வேண்டிய அவசியமே இல்லை.

இவர் திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்வுகளிலும் கலந்து கொண்டிருக்கக் கூடிய மீனாவின் கணவர் மரணம் அடைந்ததை அடுத்து ஆழ்ந்த சோகத்தில் இருந்த இவர் தற்போது அதிலிருந்து மீண்டு வந்து பல வெளிநாடுகளுக்கு தோழிகளோடு சுற்றுலா சென்று வருகிறார்.

மேலும் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க கவனத்தை செலுத்தி வரும் மீனா சமூக வலைத்தளங்கள் மட்டுமல்லாமல் அடிக்கடி பேட்டிகளையும் கொடுத்து ரசிகர்களை அசர வைப்பார்.

வாழ்க்கையில் செய்த பெரிய தப்பு..

அந்த வகையில் நடிகை மீனா சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய 25 ஆண்டு கால ரகசியம் ஒன்றை உடைத்திருக்கிறார். அதில் அவர் கூறிய விஷயங்கள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

மேலும் இது குறித்து பேசிய நடிகை மீனா என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு. இதற்கு என்னுடைய அம்மா தான் முக்கிய காரணம். எவ்வளவோ முயற்சிகள் எனக்காக நடந்தது. ஆனால் அவை அனைத்தையும் நான் தட்டி கழித்துவிட்டு வந்தேன் என கூறிய மீனா அது என்ன விஷயம் என்றும் கூறத் தொடங்கினார்.

அதன் படி நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க நடிகை மீனா தேர்வு செய்து வைத்திருக்கிறார்கள். அத்தோடு நடிகை மீனாவும் அந்த கதாபாத்திரம் குறித்து முழுமையாக கேட்டிருக்கிறார்

25 ஆண்டு கால ரகசியம் உடைத்த மீனா..

அந்த கதாபாத்திரத்திற்கு நடிகை மீனாவை ஒப்பந்தம் செய்துவிட்ட பிறகு மீனாவின் அம்மா இத்தனை நாட்களாக நீ ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு திடீரென வில்லி கதாபாத்திரத்தில் நடித்தால் அது எப்படி சரியா வருமா? ஏதேனும் உன்னுடைய சினிமா வாழ்க்கைக்கு சிக்கல் ஏற்படும் விதமாக கூட அமைந்து விடலாம்.

ஏனென்றால் நீ நடிக்க இருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லியாக யோசித்துப் பார்த்துக் கொள்ள என அவர் அம்மா பயமுறுத்த பயந்து போய் பின்வாங்கி இருக்கிறார் நடிகை மீனா. அதன் பிறகு தான் இந்த வாய்ப்பு ரம்யா கிருஷ்ணனுக்கு சென்று இருக்கிறது.

ரம்யா கிருஷ்ணன் இந்த படத்தில் நடித்தார்.இந்த தியேட்டரில் படத்தை பார்த்துவிட்டு ஏனம்மா என்னை இப்படி பயப்படுத்தி நடிக்க விடாமல் செய்தாய் என அம்மாவிடம் வருத்தப்பட்டேன். இன்னும் சொல்லப்போனால் நான் நடிக்க மாட்டேன் என கூறியதும் கே எஸ் ரவிக்குமார் எனக்காக சில காட்சிகளை மாற்றியமைக்கிறேன்.

உங்களுக்கு எதுவும் பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்கிறேன் என்றெல்லாம் கூட கூறினார். ஆனால் எதையும் நான் பொருட்படுத்தவில்லை. இது என் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு இது என பேசி இருக்கிறார் நடிகை மீனா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version