அந்த பிரபலத்துடன் தொடர்பா..? முதன் முறையாக பதில் கொடுத்த நடிகை மீனா..!

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதற்குப் பிறகு பெரும் மார்க்கெட்டை பிடித்தவர் நடிகை மீனா. தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத நடிகை என்று மீனாவை கூறலாம். குழந்தை கதாபாத்திரமாக நிறைய திரைப்படங்களில் மீனா நடித்திருந்தாலும் கூட அவர் நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படம் அதில் முக்கியமான திரைப்படம் ஆகும்.

அதன் மூலம் அதிகமான வரவேற்பை பெற்றார் நடிகை மீனா. தொடர்ந்து தமிழ் சினிமாவில் அவர் வாய்ப்பு பெறுவதற்கு காரணமாக இருந்த திரைப்படம் என் ராசாவின் மனசிலே, என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் சோலையம்மா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மீனா.

சோலையம்மா கதாபாத்திரம்:

சோலையம்மா கதாபாத்திரத்தை பொருத்தவரை அது நடிப்பதற்கு கடினமான ஒரு கதாபாத்திரமாக இருக்கிறது. ஒரு 16 வயது பெண் அந்த கதாபாத்திரத்தை அவ்வளவு சிறப்பாக நடிப்பது என்பது கஷ்டமான காரிய.ம் இதனாலேயே அந்த திரைப்படத்தில் மீனாவை நடிக்க வைப்பதற்கு படத்தின் இயக்குனர் கஸ்தூரிராஜாவே ஐயத்தில் தான் இருந்திருக்கிறார்.

ஆனால் நடிகர் ராஜ்கரண் மீனாதான் அதில் நடித்தாக வேண்டும் என்று கூறிய காரணத்தினால் மீனாவை நடிக்க வைத்தார். மீனா சிறப்பான நடிப்பை அந்த படத்தில் வெளிப்படுத்தி தான் ஒரு சிறந்த நடிகை என்பதை காட்டி இருந்தார்.

ஒரு கதாநாயகியாக மீனாவிற்கு பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம் என் ராசாவின் மனசிலே. அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீனாவிற்கு வாய்ப்புகள் அதிகமாக கிடைக்க துவங்கியது. தமிழில் முக்கிய நடிகர்களுடன் தொடர்ந்து நடிக்க துவங்கினார் மீனா முக்கியமாக ரஜினியுடன் கதாநாயகியாக நிறைய திரைப்படங்களில் மீனா நடித்திருக்கிறார்.

முன்னணி நடிகர்களுடன் வாய்ப்பு:

அதனை தொடர்ந்து கமல், கார்த்திக், பிரபு தேவா, பிரபு, விஜயகாந்த் சரத்குமார், அஜித் என்று பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார் மீனா. கடந்த 2009 ஆம் ஆண்டு மீனா வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அவருக்கு நைனிகா என்கிற குழந்தையும் இருக்கிறது இந்த நிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு நுரையீரலில் பிரச்சனை ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் இழப்பிற்கு பிறகு வெகு காலங்கள் மீனா சோகத்தில்தான் இருந்து வந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் சின்னத்திரையில் சில நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகிறார் மீனா. இதற்கு நடுவே அண்மையில் மீனா குறித்து வதந்தி ஒன்று அதிகமாக பரவி வந்தது. அவர் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பிரபல ஹீரோ ஒருவருடன் நெருக்கமாக இருப்பதாகவும் கிசுகிசுக்கள் வந்து கொண்டிருந்தன.

இது மீனாவிற்கு அதிக கோபத்தை ஏற்படுத்தியது. இது குறித்து பதில் அளித்த மீனா வதந்தி வெறுப்பவர்களால் உருவாக்கப்படுகிறது. முட்டாள்களால் பரப்பப்படுகிறது மேலும் முட்டாள்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்று ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். இந்த பதிவுக்கு நடிகை குஷ்பூவும் ஆதரவு தெரிவித்து இருந்தார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version