“இதெல்லாம் நல்லா இல்ல.. ஆமா..” ரஜினிக்கு என் மீது இந்த ஆசை இருக்கு.. மீனாவை கழுவி கழுவி ஊத்தும் ரசிகர்கள்..!

நடிகர் ரஜினிகாந்த் முதன்முறையாக, கடந்த 1977ம் ஆண்டில் அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் நடித்தார். கே பாலசந்தர் இயக்கிய இந்த படத்தில், நடிகை ஸ்ரீ வித்யா தான் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தொடர்ந்து சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்த ரஜினி, 16 வயதினிலே படத்தில், பரட்டையன் என்ற வில்லன் கேரக்டரில் நடித்து பிரபலமானார்.

அதன்பின் கலைஞானம் தயாரித்த பைரவி படம் மூலம் கதாநாயகனாக ரஜினிகாந்த் மாறினார். பிறகு ரஜினி, கமல் இருவரும் இரட்டை நாயகர்களாக சில படங்களில் நடிக்க அந்த படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது.

அன்புள்ள ரஜினிகாந்த்…

இதையடுத்து ரஜினி, கமல் என்ற இரண்டு ஹீரோக்கள், தமிழ் சினிமாவில் ஆளுமை மிக்க நடிகர்களாக மாறினர். அப்போது ரஜினிகாந்த் அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடிகர் ரஜினிகாந்த் ஆகவே நடித்தார்.

அதில் நடிகை மீனா சிறுமியாக நடித்திருந்தார். நோயாளி சிறுமியாக, எப்போதும் வீல் சேரில் இருக்கும் மீனா மீது நடிகர் ரஜினிகாந்த் அன்பும் பரிவும் காட்டுவார்.

எஜமான்

அந்த படம் வெளிவந்த பல ஆண்டுகளுக்கு பிறகு, எஜமான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடித்தார். அப்போது ரஜினிக்கு மீனா ஜோடியாக நடிப்பது குறித்து ரசிகர்களிடையே பலத்த விமர்சனம் எழுந்தது.

அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் சிறுமியாக நடித்த மீனாவுடன், இப்போது ரஜினி ஜோடியாக நடிப்பது இங்கிதம் இல்லாத செயல். அநாகரிகமாக உள்ளது என்று பலரும் விமர்சித்தனர்.

ஆனாலும் ரஜினி, மீனா ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் கிடைத்தது. படமும் செம ஹிட் ஆனது. இதைத்தொடர்ந்து ரஜினியுடன் மீனா, வீரா மற்றும் முத்து படங்களில் நடித்தார்.

சில ஆண்டுகளுக்கு முன் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்திலும் மீனா நடித்தார். ஆனால் இதில் ரஜினிக்கு நயன்தாரா ஜோடியாக நடித்திருந்தார்.

மீனாவுக்கு கோபம்

படையப்பா படத்தில், நீலாம்பரி கேரக்டரில் மீனா நடிக்க விரும்பியதாகவும், அதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால் மீனாவுக்கு என் மீது கோபம் இருக்கும் என்றும், ரஜினி மீனாவுக்கு நடந்த ஒரு பாராட்டு விழாவில் சமீபத்தில் கூறியிருந்தார்.

அந்தளவுக்கு நடிகை மீனாவுக்கும், நடிகர் ரஜினிக்கும் ஒரு நெருங்கிய நட்பும், பழக்கமும் இருந்து வருகிறது.

ரஜினிகாந்த் ஆசை…

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை மீனா, நடிகர் ரஜினிகாந்துக்கு ஒரு ஆசை இருக்கிறது. அதுதான் நான் அவருக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது.

இதை பலமுறை என்னிடம் கூறியிருக்கிறார் என ரகசியமாக வைத்திருந்த விஷயத்தை இப்போது வெளியில் போட்டு உடைத்தார் நடிகை மீனா.

இதனை கேட்ட ரசிகர்கள் அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நீங்கள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானீர்கள். அதே ரஜினிகாந்துடன் ஹீரோயினாக நடித்தீர்கள். இதுவே காலக்கொடுமை.

நல்லா இல்ல..

தற்போது ரஜினிகாந்த்துக்கு நீங்கள் அம்மாவாக நடிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் ஆசைப்பட்டதும், அதனை பொதுவெளியில் நீங்கள் கூறியதும் இதெல்லாம் நல்லா இல்ல ஆமா.. என்று மீனாவை கழுவி கழுவி ஊத்தி வருகின்றனர் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version