நடிகை மீனா மறுமணம்.. மாப்பிள்ளை இவரா..? மீனாவே கூறிய பதிலை பாருங்க..

தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வாழ்ந்தவர் நடிகை மீனா.

மீனா

என் ராசாவின் மனசிலே படத்தில் ராஜ்கிரண் ஜோடியாக நடித்தார் மீனா. சோலையம்மா என்ற கேரக்டரில் மீனாவும், மாயாண்டி கேரக்டரில் ராஜ்கிரணும் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டனர் என்றால் அது மிகையல்ல.

அதுவரை சினிமா தயாரிப்பாளராக இருந்த மொய்தீன் பாய், பிறகு இன்று வரை தமிழ் சினிமாவில் முக்கிய குணச்சித்திர நடிகராக, ராஜ்கிரண் என்ற பெயரிலேயே தன் திரை பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

எஜமான் படத்தில்

என் ராசாவின் மனசிலே படத்தை அடுத்து ரஜினியுடன் எஜமான் படத்தில் நடித்து மீனா, முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், அர்ஜூன், சரத்குமார், பார்த்திபன், முரளி, பிரபுதேவா என மீனாவுடன் ஜோடி போடாத நடிகர்களே இல்லை என்று கூறலாம்.

விரிவுப்படுத்திய மீனா

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தன் நடிப்பு எல்லையை விரிவுப்படுத்திய மீனாவுக்கு, அவரது அழகுக்கு ரசிகர் கூட்டம் வாயை பிளந்தது. தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வரும் மீனா, சமீபமாக சில படங்களில் நடுத்தர வயது ஹீரோவுக்கு மனைவியாக, நரேன் போன்றவர்களுக்கு அக்கா கேரக்டரில் நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: அடுத்த புருஷன் யாரு..? கேள்விக்கு வனிதா விஜயகுமார் கொடுத்த வேற லெவல் பதில்..!

கணவர் வித்யாசாகர் மறைவு

இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டில் அவரது கணவர் வித்யாசாகர் திடீரென உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். கணவரின் மறைவால் சில மாதங்கள் சினிமா பக்கமே வராமல் இருந்த மீனா, மீண்டும் மனதை தேற்றிக்கொண்டு நடிக்க துவங்கி விட்டார். இப்போது திரிஷியம் 3 படத்தில், மோகன்லாலுடன் இப்போது நடித்து வருகிறார்.

டான்ஸ் நிகழ்ச்சியில்

அத்துடன் அவ்வப்போது டிவி சேனல் ரியாலிடி ஷோக்களிலும் நடுவராக பங்கேற்கிறார். இப்போது விஜய் டிவியில் ஜோடி ஆர் யூ ரெடி என்ற டான்ஸ் நிகழ்ச்சியில், நடுவராக பங்கேற்றுள்ளார்.

மீனாவின் கணவர் இறந்த பிறகு, அவர் யாரை திருமணம் செய்துக்கொள்ள போகிறார் என்ற தகவல்கள் அவ்வப்போது வந்துக்கொண்டே இருக்கின்றன. இதில் மனைவியை பிரிந்து வாழும் சில நடிகர்களின் பெயர்களும் அடிபடுகின்றன.

மறுமணம்

இதற்கிடையே சினிமாவில் இப்போது நடிக்காத நடிகையின் நண்பரை தான் மறுமணம் செய்யப் போவதாக ஒரு தகவல் வேகமாக பரவியது.

இதையும் படியுங்கள்: ரஜினி போட்டோவை பார்த்து கடுப்பான கமல்ஹாசன்.. பகீர் ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

தனிமையில் …

இந்நிலையில், சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை மீனா, சமூக வலைதளங்களில் உண்மைகளை சொல்லுங்கள். அதுதான் நல்லது. நம் நாட்டில் என்னைப் போல் தனிமையில் வாழும் பெண்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

அவர்களின் பெற்றோர் மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் பற்றி யோசித்து பாருங்கள். இப்போதைக்கு எனக்கு 2வது திருமணம் குறித்த எந்தவிதமான எண்ணமும் இல்லை. எதிர்கால முடிவு குறித்து இப்போது எப்படி சொல்ல முடியும் என்று சற்று கோபமாக மீனா பேசியிருக்கிறார்.

மாப்பிள்ளை இவரா…?

நடிகை மீனா மறுமணம்.. மாப்பிள்ளை இவரா..? என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவி வரும் நிலையில், தனது மறுமணம் குறித்து மீனாவே கூறிய பதில் தற்போது வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version