குழந்தை இருந்தால் என்ன..? மீனாவை நான் திருமணம் செய்து கொள்கிறேன்.. பிரபலம் பரபரப்பு பேட்டி..!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முக்கிய கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை மீனா. என் ராசாவின் மனசிலே படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக சோலையம்மா என்ற கேரக்டரில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

அதைத்தொடர்ந்து எஜமான், முத்து, வீரா, அவ்வை சண்முகி, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, தாய்மாமன், மாமன் மகள், நாட்டாமை, செங்கோட்டை, ராஜகுமாரன், அரிச்சந்திரா என மீனா நடித்த வெற்றிப் படங்கள் ஏராளமாக உள்ளன.

மீனா

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிறமொழி படங்களிலும் ஏராளமாக நடித்தவர். வசீகரமான முகத்தோற்றமும், கிறங்கடிக்கும் கண்களும், வாளிப்பான தேகமும் கொண்ட மீனாவின் அழகில் மயங்காத நடிகர்கள் யாருமில்லை. அதனால் பல முன்னணி நடிகர்களும் மீனாவுடன் ஜோடி போட தான் ஆசைப்பட்டனர்.

நாட்டாமை படத்தில் நடித்த காலகட்டத்தில், நடிகர் சரத்குமார், மீனாவை திருமணம் செய்ய விரும்பி, அவரது வீட்டுக்கே சென்று மீனாவின் அம்மாவிடம் பெண் கேட்டதாகவும், சரத்குமார் ஏற்கனவே திருமணமானவர், வயதில் அதிக வித்யாசம் உள்ளதாக கூறி மறுத்துவிட்டதாகவும் ஒரு வீடியோவில் பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்தார். அதன்பிறகே சூரிய வம்சம் படத்தில் நடித்த பிறகு, நடிகை ராதிகாவை சரத்குமார் 2வது திருமணம் செய்துக்கொண்டார்.

மகள் நைனிகா

வித்யாசாகர் என்ற தொழிலதிபரை மீனா திருமணம் செய்துக்கொண்டார். அந்த தம்பதிக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். அவர் தெறி படத்தில் விஜய் மகளாக நடித்திருந்தார். பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் அரவிந்த் சாமி மகளாகவும் நடித்திருந்தார். இப்போது படிப்பு முக்கியம் என்பதால் நைனிகாவை நடிக்க மீனா அனுமதிப்பதில்லை.

இதையும் படியுங்கள்: காக்க காக்க படத்தில் டேனியல் பாலாஜி செய்த செயல்.. வேதனையுடன் பகிர்ந்த சூரியா..!

கணவர் மறைவு

இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டில் மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவால் காலமானார். இது மீனாவை மட்டுமின்றி தமிழ் சினிமாத்துறையினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதற்கு பின் பல மாதங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த அவர், பிறகு சமீப காலமாக நடிக்கத் துவங்கி இருக்கிறார்.

எண்ணம் இல்லை

இந்த சூழலில், மீனா 2வது திருமணம் செய்துக்கொள்வாரா என்ற கேள்வியும், சர்ச்சைகளும் தொடர்ந்து எழுந்து வருகின்றன. ஆனால் 2வது திருமணம் குறித்த எந்த எண்ணமும் தனக்கு இல்லை என்று மீனா தெளிவுபட கூறியிருக்கிறார்.

மீனாவை திருமணம் செய்ய தயார்

இப்படிப்பட்ட நிலையில், கேரளாவை சேர்ந்த சர்ச்சைக்குரிய யூடியூப்பரான அப்துல் வர்கீஸ் என்பவர், மீனா குறித்து பேசியுள்ள்ளார். அதில் அவர், மீனாவுக்கு மகள் இருப்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. மீனாவை திருமணம் செய்துக்கொள்ள நான் தயார் என்று கூறியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: அப்போதே வேண்டாம் என சொன்ன விஜய்.. பேச்சை கேட்காமல் செய்த டேனியல் பாலாஜி..!

இவர் ஒரு சர்ச்சையான நபராக பார்க்கப்படுகிறார். ஏற்கனவே நித்யா மேனன், கமல் மகள் அக்‌ஷராஹாசன் ஆகியோரை திருமணம் செய்துக்கொள்ள தயார் என்று கூறியிருக்கிறார். மோகன்லால் நடித்த ஆராத் படத்தை மிக மோசமாக விமர்சித்திருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.

குழந்தை இருந்தால் என்ன..? மீனாவை நான் திருமணம் செய்து கொள்கிறேன்..என்று அந்த யூடியூப்பர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version