பிரபுதேவா படத்துல இத பண்ணினேன்.. இப்ப நெனச்சாலும் மனச உறுத்துது ஓப்பனாக பேசிய நடிகை மீனா..

தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்து தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்துக் கொண்டவர்.

வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்ன துறையிலும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு எனக்கு என்று ரசிகர் வட்டாரத்தை அதிக அளவு பெற்றிருப்பவர். தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்கள் பலரோடு இணைந்து நடித்த கூடிய இவர் சமூக வலைதள பக்கங்களிலும் படு பிஸியாக இருப்பார்.

பிரபுதேவா படத்துல இத பண்ணினேன்..

90 கிட்ஸ்களின் கனவு கன்னியாக திகழ்ந்த மீனாவை அனைவரும் கண்ணழகி என்று அன்போடு அழைத்தார்கள். குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாலும் அதனை அடுத்து இவர் ஹீரோயினியாக களம் இறங்கி மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கிறார்.

அந்த வகையில் தமிழில் முதல் முதலாக இவர் என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட இவர் முதல் படத்திலேயே தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் இந்த படம் ஹிட் படமாக அமைந்தது.

மீனாவைப் பொறுத்த வரை அவர் நடித்த பெரும்பாலான படங்களில் இழுத்துப் போர்த்திக் கொண்டு அதிக அளவு கிளாமர் காட்டாமல் தேவையான அளவு கிளாமர் காட்டி மட்டுமே நடித்திருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

அந்த அளவு குடும்ப பாங்கினியாக நடித்து இளைஞர்களையும் கொள்ளை கொண்ட எந்த அழகி அண்மை பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசும் போது கிளாமர் காட்சிகள் நடிப்பது குறித்து இவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது.

அந்தக் கேள்விக்கு அவர் என்ன பதில் சொன்னார். அவருக்கு அப்படி நடிக்க வாய்ப்புகள் கிடைத்ததால் அப்படி கிடைத்திருந்தால் அந்த வாய்ப்பினை அவர் எப்படி பயன்படுத்தினார் என்பது பற்றிய விரிவான விவரத்தை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

இப்ப நெனச்சாலும் மனச உறுத்துது..

மீனா நடித்த படங்களில் பெரும்பாலும் நீச்சல் உடை இவர் நடித்திருப்பது மிகவும் குறைவு என்று சொல்லலாம் மேலும் அந்த காலத்திலேயே இது போன்ற கிளாமர் காட்சிகளில் நடிக்க கூடாது என்று இவர் தவிர்த்து இருக்கிறார். இதனை அடுத்து ஒரு முறை கிளாமர் காட்சியில் ஏன் நடிக்க கூடாது என்று பலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

அதைத்தொடர்ந்து இவர் அப்படி ஒரு காட்சிகள் நடித்தால் தான் என்ன ஏன் முயற்சி செய்யக் கூடாது என்று தோன்றியதை அடுத்து நீச்சல் காட்சிகள் நடிக்க ஒரு படத்தில் ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

அதுவும் பிரபுதேவா உடன் இணைந்து நடிக்க கூடிய அந்த படத்தில் நீச்சல் உடையில் நடித்திருக்கிறார். இந்த உடையை அணிந்து மேக்கப் ரூமில் இருந்து வெளியே என்னை வரச் சொன்ன போது என்னால் வெளியே வர முடியவில்லை.

எனக்கு மிகவும் கூச்சமாகவும், உறுத்தலாகவும், நெருடலாகவும் இந்த உடையை அணிந்து கொண்டு எப்படி வெளியே வருவது என்பதில் தயக்கமாகவும் இருந்தது என்று கூறினார்.

ஓப்பனாக பேசிய நடிகை மீனா..

அப்போதுதான் கவர்ச்சியாக நடிக்க கூடிய நடிகைகளை பற்றி நினைத்துப் பார்த்ததாகவும் அவர்கள் எப்படி இது போன்ற உடைகளை அணிந்து பலர் மத்தியில் நடிக்கிறார்கள் என்ற எண்ணமும் தனக்கு ஏற்பட்டதாக சொல்லி இருக்கிறார்.

உண்மையிலேயே அது போன்ற காட்சிகளில் நடிப்பதுதான் மிகவும் சிரமம். அந்த நடிகைகளை நான் வணங்குகிறேன் என்று சொன்னதாவது மட்டுமல்லாமல் நீச்சல் உடையில் தான் வெளியே வருவதற்கு சங்கடப்பட்ட விஷயத்தை ஓபன் ஆக கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version