பிரபல சீரியல் நடிகை ஆன மீனா வேமுரி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து எல்லோருது மனம் கவர்ந்த சீரியலாக பார்க்கப்பட்டு வரும் ஈரமான ரோஜாவே தொடரில் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.
சீரியல் நடிகை மீனா வேமுரி:
அந்தத் தொடரில் காவியாவின் மாமியாராக இவர் நடித்திருப்பார். அந்த தொடரில் தனது இரண்டு மகன்களுக்கு அம்மாவாகவும் பிரியா ,காவியாவிற்கு அருமையான மாமியாராகவும் பார்வதி என்ற ரோலில் நடித்து பெரும் புகழ்பெற்றார் .
அதில் மீனாவின் கதாபாத்திரம் வெகு சில நாட்களிலேயே மக்கள் மனதை கவர்ந்து விட்டது. எல்லோருக்கும் இப்படி ஒரு மாமியார் இருந்தால் குடும்பத்தில் பிரச்சனையே வராது என்று சொல்லும் அளவுக்கு அந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் மீனா.
இந்த சீரியலை தவிர்த்து மேலும் அவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இலக்கியா என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார்.
கப்பலில் வேலை செய்த மீனா வேமுரி:
இவர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்னர் கப்பலில் வேலை பார்த்து வந்தார். ஆனால், அந்த வேலையில் நிறைய டார்ச்சர் இருந்ததால் அந்த வேலையை விட்டுவிட்டு சீரியல் நடிகையாகி விட்டார்.
நல்ல அழகான தோற்றம் கொண்டு வடநாட்டு சீரியல் நடிகை போல் இருக்கும் மீனா வேமுரிக்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள்.
இவர் தனது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட அதை நெட்டிசன்ஸ் வழிந்து கமென்ட் செய்வதெல்லாம் வழக்கமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தை பேட்டி ஒன்றில் சீரியலில் நடிக்கும் அனுபவத்தை குறித்தும் தனக்கு ஏற்பட்ட அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை குறித்து மிகவும் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
சீரியலில் இருக்கும் பிரச்சனை என்ன என்று கேட்டீர்கள் ஆனால் சில சமயங்களில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து போன் பண்ணி நாளைக்கு ஷூட்டிங் வந்துடுங்க மேடம் என்று சொல்வார்கள் .
அதற்காக மற்ற சீரியல்களின் படப்பிடிப்பை கூட நிறுத்திவிட்டு நான் காத்திருந்தால் போனே வராது. அந்த சமயங்களில் மிகவும் டென்ஷன் ஆகி கத்தி இருக்கிறேன் என மீனாவை வேமுரி கூறினார் .
8 வருஷமா… அட்ஜெஸ்ட்மென்ட்:
மேலும், அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை குறித்தும் தனக்கு நடந்த மிக மோசமான அனுபவத்தை குறித்தும் பேசிய அவர்…8 வருடமாக நான் இந்த சினிமா துறையில் இருக்கிறேன்.
எனக்கு அட்ஜஸ்ட்மென்ட் என்ற பிரச்சனை இதுவரை நடந்ததில்லை. ஆனால் சில சமயங்களில் போன் மூலமாக அதுபோன்ற தொல்லைகளை நான் சந்தித்ததுண்டு.
சில இயக்குனர்கள் போன் பண்ணி மேடம் உங்களுக்கு இந்த படத்தில் வாய்ப்பு கொடுக்கிறோம். ஆனால்… நீங்கள்…. என்று இழுத்து ஆரம்பிபேசுவார்கள்.
அப்போதே எனக்கு புரிந்துவிடும் நீங்கள் அட்ஜஸ்ட்மென்ட் மாதிரியான விஷயத்தை எல்லாம் என்னிடம் எதிர்பார்க்காதீங்க அப்படி இருந்தால் என்னை கூப்பிடாதீங்க என்று எடுத்த எடுப்பிலே சொல்லி விடுவேன்.
அதனால் அதன் பிறகு அவர்கள் வேறு வழியில்லாமல் அதை சொல்ல வரலை என்று சொல்வார்கள். அடுத்து அவர்களிடம் இருந்து ஃபோனே வராது இந்த மாதிரியான பிரச்சனைகளை நான் சந்தித்தாலும் முன்கூட்டியே அதை தடுத்து நிறுத்தி விடுவேன் என கூறியிருந்தார்.
ஈரமான ரோஜாவே மாமியார்:
மேலும் நான் சீரியல்களில் மிகவும் பவ்யமான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதால் சிறந்த மாமியார் சிறந்த பெண் எனப் புகழ் பாராட்டுகிறார்கள் .
ஆனால் நிஜத்தில் எனக்கு நிறைய கோபம் வரும் என் கோபத்தை பார்த்தால் இவரா இப்படி ? என யோசிக்கும் அளவுக்கு இருக்கும் என கூறி இருக்கிறார் .
அப்படித்தான் ஒருமுறை என்னுடைய கார் தெருவில் இருந்து வெளியே எடுக்கும் போது ஒருவன் என்னை பின்னால் பாலோ செய்து வந்து என் காரின் அருகிலேயே முட்டி நிறுத்தி நான் இறங்க முடியாத அளவுக்கு நிறுத்தி விட்டான் .
உடனே நான் கோபப்பட்டு கத்தியும் அவன் கேட்கவே இல்லை. தெருவில் இருந்தவர்கள் எல்லாம் சொல்லி கொஞ்சம் நகர்த்தி நிறுத்தினான்.
உயிர் பயம் காட்டினான்.. கோபம் வந்துடுச்சு:
உடனே நான் இறங்கி அவனை பின்னி பெடல் எடுத்து விட்டேன். அவ்வளவு கோபம் வந்தது…. அவன் உயிர் பயம் காட்டினான் அதனால் அவ்வளவு கோபம் வந்தது என கூறினார்.
மேலும் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படங்களுக்கு பல பேர் மோசமான இழிவான கமெண்ட்ஸ்களை போடுவார்கள் நான் அதை எல்லாம் டெலிட் செய்து விடுவேன்.
அத்துடன் சில சமயங்களை சூட்டிங் குறித்த நேரத்தில் எடுத்து முடிக்கவே மாட்டார்கள். காலை 8 மணிக்கு ஷூட்டிங் என்று சொல்லிவிட்டு இரவு 8 மணி வரைக்கும் ஷூட்டிங் எடுக்காமல் சும்மாவே உட்கார வச்சு அனுப்புவாங்க அப்போதெல்லாம் அளவு கடந்த கோபம் வரும்.
சில சமயங்களில் உதவி இயக்குனர்களை அழைத்து உங்களுக்கெல்லாம் மனசாட்சி இல்லையா? என்று நான் திட்டி இருக்கிறேன் .
ஆனால் பாவம் அவங்க என்ன பண்ணுவாங்க? அவங்களுக்கு அந்த விஷயம் தெரியாது என கூறியிருக்கிறார் மீனா வேமுரி.