டீ ஏஜிங் செய்யாத விஜய் முகம் இதுதான் பாருங்க.. விஜய் மகள் வெளியிட்ட Exclusive புகைப்படங்கள்.!

கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகி அதிகமான வரவேற்பு பெற்ற திரைப்படமாக கோட் திரைப்படம் இருந்து வருகிறது. அதில் ஒரு விஜய் வில்லனாகவும் மற்றொரு விஜய் கதாநாயகனாகவும் இருப்பதாக கதை இருக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்த சமயத்தில் இது ஜெமினி மேன் என்கிற ஹாலிவுட் திரைப்படத்தின் தழுவல் என்று பேசப்பட்டது. ஆனால் படம் வெளியான பிறகு இதற்கும் கோட் திரைப்படத்திற்கும் இடையே சில ஒற்றுமைகள் இருந்தாலும் கூட கதையை பொருத்தவரையில் அந்த திரைப்படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாகதான் கோட் திரைப்படம் இருந்து வருகிறது.

டீ ஏஜிங் செய்யாத விஜய் முகம்

இந்த திரைப்படத்தில் இளமை விஜய்யை காட்டுவதற்காக டி ஏஜிங் என்கிற ஒரு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கின்றனர். ஜெமினிமேன் திரைப்படத்திலும் வீல்ஸ்மித் கதாபாத்திரத்தை இளமையாக காட்டுவதற்கு இதே டீ ஏஜிங் என்கிற முறையைதான் பயன்படுத்தினர். ஆனால் கோட் திரைப்படத்தை விடவும் ஜெமினிமேன் திரைப்படத்தில் அது இன்னமுமே சிறப்பாக அமைந்திருந்தது.

ஆனால் இந்த திரைப்படத்திலும் தமிழில் இது புதிய முயற்சி என்பதால் தற்சமயம் செய்திருக்கும் முறைக்கே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஏற்கனவே வெளியான பாடலில் விஜயின் முகம் சரியாக இல்லை என்று மக்கள் அதிகமாக குரல் கொடுத்ததை அடுத்து மீண்டும் விஜயின் முகத்தில் சில சீரமைப்புகளை செய்துதான் அதை படத்தை வெளியிட்டிருந்தனர்.

அது மக்களுக்கு பிடித்தும் இருந்தது. இப்போது வரை நல்ல வசூலை கொடுத்து வருகின்ற படமாக கோட் உள்ளது. இந்த டீ ஏஜிங் செய்வதற்கு விஜய் முகத்தை முழுதாக ஸ்கேன் செய்ய வேண்டும் என்பதற்காக அவர் மொத்தமாக தாடி மீசை எல்லாம் ஷேவ் செய்துவிட்டு தான் வர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

எக்ஸ்க்லூசிவ் புகைப்படங்கள்

அதனால்தான் அந்த காலகட்டங்களில் விஜய் பங்கு பெற்ற பொது நிகழ்ச்சிகளில் எல்லாம் முழுதாக ஷேவ் செய்யப்பட்டு வந்திருப்பதை பார்க்க முடியும். இந்த நிலையில் இதில் நடித்த விஜய் டீ ஏஜிங் செய்யப்படாமல் எப்படி இருந்தார் என்பது பலருக்கும் தெரியாத விஷயமாக இருந்தது.

படத்தில் விஜய் மகளான ஸ்ரீநிதி கதாபாத்திரத்தில் நடித்த மீனாட்சி சவுத்ரி தற்சமயம் டி ஏஜிங் செய்யப்படாத விஜயின் முகத்தை கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் இவை அதிக பிரபலமாகி வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version