இந்த பிஞ்சு நெஞ்சு தாங்குமா..? தங்கை நடிகை மினாளுடன் செந்தில்குமாரி வீடியோ..!

தமிழில் துணைக் கதாபாத்திரங்களாக நடிக்கும் நடிகைகள் பெரும்பாலும் மக்கள் மத்தியில் ரிஜெஸ்டர் ஆவது கிடையாது. ஏனெனில் ஒரு சில காட்சிகளில் மட்டும்தான் திரைப்படங்களில் இவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.

ஆனாலும் சில நடிகைகள் தங்களுடைய தனிப்பட்ட நடிப்பின் மூலமாக மக்கள் மத்தியில் தங்களது முகத்தை அறிமுகம் செய்து விடுகின்றனர். அப்படியாக 2009 ஆம் ஆண்டு வெளியான பசங்க திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை செந்தில் குமாரி.

பசங்க படத்தில் அறிமுகம்:

போதும் பொண்ணு என்கிற கதாபாத்திரத்தில் அந்த திரைப்படத்தில் அறிமுகமாகி இருந்தார் செந்தில்குமாரி. அதற்குப் பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. அதற்கு முக்கிய காரணமாக பசங்க திரைப்படமாகதான் இருந்தது.

அந்த திரைப்படத்தில் படம் முழுவதுமே வரக்கூடிய ஒரு கதாபாத்திரமாக போதும் பொண்ணு கதாபாத்திரம் இருந்தது. அதனை தொடர்ந்து ஒஸ்தி, மெரினா, கடல், கோலிசோடா போன்ற திரைப்படங்களில் எல்லாம் வாய்ப்புகளை பெற்றார் செந்தில் குமாரி.

அந்த திரைப்படங்களும் ஓர் அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பிறகு பெரிய திரைப்படங்களிலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மெர்சல் திரைப்படத்தின் கூட ஒரு கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். பெரும்பாலும் கிராமத்துப் பெண் என்கிற கதாபாத்திரத்தில் ஒரு நடிகை வேண்டுமென்றால் அதிகபட்சம் செந்தில்குமாரியைதான் அழைத்தனர் இயக்குனர்கள்.

அக்காவும் பிரபலமானவர்:

அதனால் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இவர் எப்படி வெள்ளி திரையில் பிரபலமானவராக இருக்கிறாரோ அதேபோல அவரது சகோதரியும் கூட வெள்ளித்தறையில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார்.

தமிழில் முதல் முதலாக தவமாய் தவமிருந்து திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார் மீனாள். இந்த திரைப்படத்தை இயக்குனர் சேரன் இயக்கியிருந்தார். குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக இது இருந்ததால் மீனாளுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தது.

அதனை தொடர்ந்து திருப்பாச்சி திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். தொடர்ந்து சில்லுனு ஒரு காதல் தீபாவளி, பள்ளிக்கூடம், வியாபாரி போன்ற திரைப்படங்களில் எல்லாம் இவர் வாய்ப்புகளை பெற்று வந்தார்.

சகோதரிகள் இருவருமே தொடர்ந்து தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். நிறைய பிரபலமான திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் சமீபத்தில் சுற்றுலா சென்ற வீடியோ பிரபலமாகி வருகிறது காமெடியாக அவர்கள் இருவரும் நடித்து வெளியாகி இருக்கும் அந்த வீடியோதான் சமீபமாக அதிக ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version