மனசுல தாங்க முடியாத வலிகள் இருக்கு.. அமைச்சருடன் தொடர்பு.. இரண்டாம் திருமணம்.. மீனா கொடுத்த பதில்.!

தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா வளர்ந்து முன்னணி ஹீரோயினியாக தமிழில் பல முன்னணி நடிகர்களோடு நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்து தனது அசாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்திய எவர்கீன் நடிகையாக விளங்குகிறார்.

மனசுல தாங்க முடியாத வலிகள் இருக்கு..

திரை உலகத்தில் பீக்கில் இருந்த சமயத்தில் கூட எந்த நடிகைகளோடும் இணைத்து பேசப்படாத நடிகை மீனா இவரது கணவர் இறந்ததை அடுத்து அடுக்கடுக்காக கிசு கிசுக்கள் இவரது இரண்டாம் திருமணம் பற்றி வெளி வந்தது.

இதை அடுத்து தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தக் கூடிய வகையில் பாஜக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா பேசிய பேச்சை அடுத்து பல்வேறு விதமான சர்ச்சைகள் கிளம்பியுள்ளது.

இதற்குக் காரணம் திருச்சி சூர்யா பிஜேபி கட்சியில் இருக்கும் பல நபர்கள் பற்றி பல்வேறு வகையான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார்.

அதில் முக்கியமாக பிஜேபியில் இருக்கும் எல் முருகனையும் நடிகை மீனாவையும் இணைத்து பேசிய பேச்சு வைரல் ஆகிவிட்டது.

இது குறித்து அவர் சில வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு பலரையும் பல்வேறு கோணங்களில் சிந்திக்க வைத்துள்ளது.

இதற்கு காரணம் எல் முருகனுக்கும் பிரபல நடிகைக்கும் தொடர்புள்ளது என்று அந்த நடிகையின் பெயரை வெளிப்படையாக சொல்லாமல் பொங்கல் விழாவில் அந்த நடிகை கலந்து கொண்டிருக்கிறார் என்று கூறி சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறார்.

இந்த பொங்கல் விழாவிற்கு பிரதமர் மோடி வந்திருந்த நிலையில் பிஜேபியில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாமல் இருக்கும் மீனா எதற்காக அந்த விழாவிற்கு சென்றார் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

இந்த விஷயத்தை நடிகை மீனா தற்போது மனதில் தாங்க முடியாத வலிகளோடு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

அமைச்சருடன் தொடர்பு.. இரண்டாம் திருமணம்..

மேலும் இந்த விழாவிற்கு கலா மாஸ்டரோடு தோழி என்ற அடிப்படையில் இவர் சென்றிருக்கலாம் என்ற பேச்சுக்கள் எழுந்த போதும் இவருக்கும் அமைச்சருடன் தொடர்பு இருக்கிறதா? என்ற ரீதியில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் அண்மைக்காலத்தில் தன் கணவரை இழந்த நிலையில் இவரை பலரும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக பல்வேறு கருத்துக்களும் ஊடகங்களில் எழுந்து வந்த போதும் அவற்றை எல்லாம் மீனா மறுத்திருந்தார்.

மேலும் திருச்சி சூர்யா கூறிய இந்த குற்றச்சாட்டுக்கு எந்தவித பதிலையும் அளிக்காத நிலையில் இப்படி இருக்கலாம் என்று அனைவரும் யூகிக்க ஆரம்பித்த நிலையில் எதற்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய வகையில் மீனா தற்போது பதிலடி தந்திருக்கிறார்.

மீனா கொடுத்த பதில்..

அந்த வகையில் மீனா கூறிய பதிலில் மனசுல தாங்க முடியாத வலிகள் இருக்கு எனினும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவது நல்லதல்ல.

அதை வெளிக்காட்டாத வகையில் முகமூடி ஒன்றை போட்டுக் கொள்வது தான் சிறப்பானது என்று சொல்லி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் நம்மை வெறுப்பவர்கள் எப்போதும் நம்மை வெறுத்துக் கொண்டே தான் இருப்பார்கள். அது போல முட்டாள்கள் அனைவரும் முட்டாள்களாகவே தான் இருப்பார்கள்.

எனவே இதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் இருப்பதே சிறப்பானது. மேலும் வாழு வாழ விடு வாழ்க்கை மிகவும் எதார்த்தமானது.

எதையும் பாசிட்டிவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.எனவே அன்பை பரப்புங்கள் என்று மிகவும் எமோஷனலாக பதிலடி தந்திருப்பதை பார்த்து அனைவரும் மீனாவிற்கு ஆதரவாக பேசி வருகிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version