இசையமைப்பாளருடன் தொடர்பு.. கணவரால் வாழ்க்கையை தொலைத்த மீரா ஜாஸ்மின்..!

மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்து, தமிழ் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகைகள் மிக அதிகம். இதற்கு முக்கிய காரணம், மலையாள நடிகைகள் என்றாலே அவர்களது வசீகரிக்கும் அழகும், உடல் தோற்றமும் எளிதில் ரசிகர்களை மயக்கி விடுகிறது.

அம்பிகா, ராதா, நதியாவில் துவங்கிய கீர்த்தி சுரேஷ் வரை தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த மலையாள நாயகிகளே மிக அதிகம். அந்த வகையில், மீரா ஜாஸ்மினும் ஒருவர்.

மீரா ஜாஸ்மின்

மலையாளத்தில் பல படங்களில் நடித்து வந்த மீரா ஜாஸ்மின், கடந்த 2002ம் ஆண்டில், ரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். டைரக்டர் லிங்குசாமி இயக்கிய இந்த படத்தில், நடிகர் மாதவன் ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார். இந்த படம் வெற்றி பெற்றது.

அதனால் தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் வந்தன. விஜயுடன் புதிய கீதை, எஸ்ஜே சூர்யாவுடன் திருமகன், ஸ்ரீகாந்துடன் மெர்க்குரி பூக்கள், பரத்துடன் நேபாளி, பிரசாந்துடன் மம்பட்டியான், அஜீத்குமாருடன் ஆஞ்சநேயா, விஷாலுடன் சண்டக்கோழி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தமிழில் பல படங்களில் நடித்து வந்த மீரா ஜாஸ்மினுக்கு ஒரு கட்டத்தில் தமிழில் பட வாய்ப்புகள் குறைந்தது. அதன்பின், மீண்டும் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார்.

திருமணம்

இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டில், அணில் ஜான் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் திருமணமான சில ஆண்டுகளிலேயே அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். விவாகரத்தும் பெற்றுவிட்டனர்.

இதைத் தொடர்ந்து மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இப்போது தமிழில் படங்களில் நடிக்க மீரா ஜாஸ்மின் ஆர்வமாக இருக்கின்றனர். ஒரு சில இயக்குநர்களுடன் அவர் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் தெரிய வருகிறது.

இசைக்கலைஞருடன் காதல்…

மீரா ஜாஸ்மின் குறித்து, நேர்காணல் ஒன்றில் மூத்த சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறுகையில், திருமணம் செய்வதற்கு முன்பே, இசைக்கலைஞர் ஒருவருடன் மீரா ஜாஸ்மினுக்கு காதல் ஏற்பட்டது. அவரது இசையில் மயங்கி மனதை பறிகொடுத்து விட்டார்.

ஆனால் இருவருக்கும் ஒருகட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து விட்டனர். அதன்பிறகு தான் அவர் வேறு ஒருவரை திருமணம் செய்துக்கொண்டார். அதனால்தான் அவரது சினிமா வாழ்க்கை பாதிக்கப்பட்டது, என்று அவர் கூறியிருக்கிறார்.

இசையமைப்பாளருடன் தொடர்பு, குடும்ப வாழ்க்கையில் கணவரை பிரிந்த பாதிப்பால் வாழ்க்கையை தொலைத்தவர் மீரா ஜாஸ்மின் என்று செய்யாறு பாலு கூறி இருக்கிறார்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version