தமிழில் சில நடிகைகள் சீரியல்கள் மூலமாக பிரபலம் அடைவார்கள். சிலர் சமூக வலைதளங்கள் மூலமாக பிரபலம் அடைவார்கள். சிலர் திரைப்படங்கள் மூலமாக பிரபலம் அடைவார்கள். அந்த வகையில் சீரியல்கள் மூலமாக மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலம் அடைந்தவர் நடிகை மீரா கிருஷ்ணன்.
மீரா கிருஷ்ணன் சின்னத்திரை என்னும் விஷயம் தமிழில் ஆரம்பித்த காலம் முதலே அதில் பயணித்து வருகிறார். ஆரம்பத்தில் தூர்தர்ஷன் சேனலில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை துவங்கினார் மீரா கிருஷ்ணன். அதற்கு பிறகு இவருக்கு சன் டிவி சீரியல்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
மீரா கிருஷ்ணன்
இதற்கு நடுவே 2002 ஆம் ஆண்டு முதல் முதலாக பாலா என்கிற திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படத்தில் ஷாம் மற்றும் மீரா ஜாஸ்மின் நடித்திருந்தனர். அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் மீனா கிருஷ்ணன்.
பெரும்பாலும் மனைவி கதாபாத்திரம் அல்லது அம்மா கதாபாத்திரம்தான் இவருக்கு கிடைக்கும். இவரது பெயரே பலருக்கும் தெரியாது என்றாலும் கூட மீரா கிருஷ்ணனனை அனைவருக்கும் தெரியும். கிட்டத்தட்ட 100க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார் மீரா கிருஷ்ணன்.
நாடகங்களை பொறுத்தவரை படங்களோடு ஒப்பிடும்போது குறைந்த அளவில்தான் நாடகங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் 1999 இல் இருந்து நாடகங்களில் நடித்து வருகிறார் மீரா கிருஷ்ணன். முதன்முதலாக புஷ்பாஞ்சலி என்கிற சன் டிவி சீரியலில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
மீரா கிருஷ்ணன்
அதனை தொடர்ந்து தமிழில் நிறைய சீரியல்களில் மீரா கிருஷ்ணன் நடித்திருக்கிறார். ஆனால் தமிழை தாண்டி வேறு எந்த மொழியிலும் இவர் நடித்ததில்லை. திரைப்படங்களாக இருந்தாலும் சரி சீரியல்களாக இருந்தாலும் சரி அதிகபட்சம் தமிழில் மட்டும்தான் நடித்திருக்கிறார்.
பெரும்பாலும் பாரம்பரியமான கதாபாத்திரத்தில்தான் இவர் நடித்திருப்பார். கவர்ச்சி உடையில் எல்லாம் இவரை திரைப்படங்களில் பார்க்க முடியாது இந்த நிலையில் ஒரு பேட்டியில் அவர் கூறும் பொழுது மகிழ் திருமேனி இயக்கிய ஒரு திரைப்படத்தில் சிகரெட் பிடிக்கும் காட்சி இருந்தது.
நீங்களே நினைச்சுகிட்டீங்க.
அதற்காக நான் சிகரெட் பிடிக்க கற்றுக்கொண்டு அந்த காட்சியில் நடித்தேன் என்று கூறினார். அப்பொழுது தொகுப்பாளர் பாரம்பரியமாக நடிக்கும் நீங்கள் எப்படி இப்படி சிகரெட் காட்சிகளில் நடிக்கலாம் என்று கேட்டார்.
அதற்கு பதில் அளித்த மீரா கிருஷ்ணன் பாரம்பரியமான கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்று நான் உங்களிடம் கூறினேனா. நீங்களாக அப்படி நினைத்துக் கொண்டால் எப்படி ஒரு படத்திற்கு சிகரெட் பிடிக்க வேண்டும் என்கிற தேவை இருந்தால் நான் அதை செய்யதான் வேண்டும் என்று கூறினார்.
இதற்காக உங்கள் வீட்டில் எதுவும் கேட்கவில்லையா என்று கேட்ட பொழுது இல்லை ஒரு படத்தில் ஒரு காட்சியில் நடிப்பதால் என்னை எனது வீட்டில் தவறாக எடை போட்டு விட மாட்டார்கள். மேலும் அந்த படத்தில் முழுதாக சிகரெட் ஒன்றும் பிடிக்கவில்லை அதை வாயில் வைத்துக் கொண்டு புகையை ஊத மட்டுமே செய்தேன் என்று கூறியிருக்கிறார் மீரா கிருஷ்ணன்.