தமிழைப் பொறுத்தவரை வெறும் நான்கு படங்களில் மட்டுமே மீரா மிதுன் நடித்திருந்தாலும் தன்னை ஒரு பிரபலமான நடிகை என்று தான் கூறிக் கொள்வார்.
நடன இயக்குனர் கணேஷ் குருவால் மீராமிதுன் ஒரு நடிகையாக அறிமுகமானார். இதன் பின் இவர் மிஸ் ஃபேஸ் ஆஃப் சென்னை அழகுப் போட்டியில் போட்டியிட்டார். 2015 ஆண்டு நடந்த மிஸ் மெட்ராஸ் போட்டியில் இதில் பங்கேற்று தீபிகா முரளிக்கு பின் இரண்டாவது இடத்தை பிடித்தார்.
மேலும் நடிகை மீரா மிதுன் நடிகர் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் திரிஷாவிற்கு தோழியாக நடித்திருப்பார்.இதனையடுத்து 8 தோட்டாக்கள் மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கிய நகைச்சுவை படமான தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தில் நடித்திருந்தார்.
தற்போது மீராமிதுன் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் மிஸ்டர் நடிகரின் மனைவி என்று பதிவிட்டு கழுத்தில் தாலி கட்டிய நிலையில் நெற்றியில் அழகாக குங்குமம் வைத்துள்ள படத்தை வெளியிட்டிருக்கிறார்.
இந்த படமானது தற்போது வலைதளத்தில் மிகவும் ட்ரென்டிங் ஆக உலா வருகிறது. இரண்டாவது முறையாக இவர் ரகசிய திருமணத்தை செய்து கொண்டாரா..? இல்லை பப்ளிசிட்டிக்காக தாலியைக் கட்டிக் கொண்டு ரசிகர்களை கலாய்க்கிறாரா..? என்பது தெரியாமல் பல கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
ஓரு சிலர் இவர் படப்பிடிப்பிற்காக கூட இந்த மண கோலத்தில் இருக்கலாம் என்று கூறி வருகிறார்கள்.இது உண்மையா இல்லை பொய்யா என்பதை விரைவில் இவர் அறிவிப்பார் என அவரது ரசிகர்கள் தற்போது ஆவலாக காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், பெங்களூருவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் மீரா மிதுன் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மாடலிங்கில் நுழைந்த போதில் இருந்தே நல்ல நண்பராக இருந்த அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார் மீரா மிதுன் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சில நெட்டிசன்கள் இது உண்மையா..? இல்லையா..? என்பதைப் பற்றிய பட்டிமன்றத்தை தற்போது வலைத்தளங்களில் ஆரம்பித்து இருப்பதோடு யார் அந்த நண்பர்..? என்ற விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.