மறுவார்த்தை பேசாதே…. மேகா ஆகாஷிற்கு நிச்சயதார்த்தம் முடிந்தது – குவியும் வாழ்த்துக்கள்!

மறுவார்த்தை பேசாதே..மடி மீது நீ தூங்கிடு… இந்த பாடல் வரிகளை கேட்ட உடனே நம் எல்லோருக்கும் ஞாபகத்திற்கு வந்துவிடுவார் நடிகை மேகா ஆகாஷ்.

சென்னையை சேர்ந்த தமிழ் பெண் ஆன மேகா ஆகாஷ் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

நடிகை மேகா ஆகாஷ்:

முதன்முதலில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த லை என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார்.

அதன் பிறகு வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது.

இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெரும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரிதாக ஹிட் அடிக்க வில்லை.

இத்திரைப்படத்தில் மேகா ஆகாஷ் நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக மிகப் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து மிக குறுகிய காலத்திலேயே பிரபலமான நடிகையாக இருந்து வந்தார்.

தமிழ்…. தெலுங்கில் வெற்றி நாயகி:

சென்னையில் பிறந்து தமிழ் சினிமா துறையின் மீது இருந்த ஆர்வத்தால் நடிக்க வேண்டும் என்ற ஒரு ஆசையில் முதன் முதலில் 2014ல் ஒரு பக்கா கதை எனும் திரைப்படத்தின் நடித்து தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார் .

ஆனால், இந்த திரைப்படம் வெளிவரவே தாமதம் ஆகிவிட்டதால் லை எனும் திரையில் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து கோலிவுட்டில் அறிமுகமாகி இருந்தார் .

இந்த திரைப்படத்தில் நிதின் குமாருக்கு ஜோடியாக சைத்ரா என்ற கதாபாத்திரத்தில் மேகா ஆகாஷ் நடித்திருப்பார் .

அதை தொடர்ந்து இயக்குனர் கிருஷ்ண சைதன்யா என்பவர் இயக்கிய 2018ல் வெளியான சல் மோகன் ரங்கா என்ற திரைப்படத்தில் மறுபடியும் தெலுங்கில் நடித்து நித்தின் குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இப்படியாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமான புதிதிலே அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வந்தார்.

மேகா ஆகாஷ் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.

இந்த திரைப்படத்தில் தனுஷ் உடன் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் என்று சொல்லலாம்.

கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்திருந்த இந்த திரைப்படம் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது.

குறிப்பாக இந்த படத்தில் இடம் பெற்ற மறுவார்த்தை பேசாதே பாடல் இன்று வரை ரசிகர்களால் மறக்க முடியாது .

காதலுடன் திடீர் நிச்சயதார்த்தம்:

பலரது ஃபேவரைட் பாடல்கள் ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது. பின்னர் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வந்த மேகா ஆகாஷ் தற்போது திடீரென தனது நீண்ட நாள் காதலருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டிருக்கிறார் .

அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் மேகா ஆகாஷ் என்னுடைய ஆசை நிறைவேறியது …என் காதலனுடன் நிச்சயதார்த்தம் முடிந்தது எனக்கூறி அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் .

தற்போது 28 வயது ஆகும் மேகா ஆகாஷ் அதுக்குள்ள திருமணம் செய்துகொள்கிறாரா? என ரசிகர்கள் செம ஷாக் ஆகி இந்த புகைப்படத்தை வைரல் ஆக்கி வாழ்த்தி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version