கல்யாணத்துக்கு வந்துடுங்க அங்கிள்… குடும்பத்தோடு சென்று ரஜினிக்கு பத்திரிக்கை வைத்த மேகா ஆகாஷ்!

சென்னை சேர்ந்த தமிழ் பெண்ணான மேக ஆகாஷ் குறும்படங்களில் நடித்து அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இவர் முதன் முதலில் 2014ல் ஒரு பக்கா கதை எனும் திரைப்படத்தில் நடித்த தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார்.

நடிகை மேகா ஆகாஷ்!

ஆனால் இந்த திரைப்படம் வெளிவர தாமதமானதால் அடுத்ததாக 2017 லை எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் .

அதுதான் இவரது முதல் திரைப்படம் கூட. இந்த திரைப்படத்தில் இவர் நடிகர் நிதின் குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதில் மேகா ஆகாஷின் கேரக்டர் சைத்ரா என்ற கதாபாத்திரத்தில் இருந்தது. அந்த திரைப்படத்தில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தெலுங்கு சினிமாவின் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தார்.

அதைத் தொடர்ந்து இயக்குனர் கிருஷ்ண சைதன்யா என்பவர் இயக்கிய 2017 வெளியான சல் மோகன் ரங்கா என்ற திரைப்படத்தில் மறுபடியும் நடிகர் நிதின் குமாருக்கு ஜோடியாகவே நடிகை மேகா ஆகாஷ் நடித்து அறிமுகமானார் .

“மாறுவதை பேசாதே” கொடுத்த அடையாளம்:

இந்த திரைப்படமும் அவருக்கு பெயரும் புகழும் பெற்று தந்தது. அதன் பிறகு தமிழ் சினிமாவிலிருந்து மேகா ஆகாஷுக்கு வாய்ப்பு கிடைக்க 2019 இல் தனுஷ் நடிப்பில் வெளிவந்த என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார் .

இந்த திரைப்படத்தில் அவர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ரொமான்டிக் காதல் திரைப்படமாக வெளிவந்த இந்த திரைப்படத்தில் மேகா ஆகாஷின் நடிப்பு எல்லோரையும் கவர்ந்தது .

குறிப்பாக இளவட்ட ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்தது என்றே சொல்லலாம். மறுவார்த்தை பேசாதே பாடல் இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் இருந்து வருகிறது.

ஆனால் இந்த படம் வெளியாவதற்கு முன்னதாகவே ரஜினி நடிப்பில் வெளியான பேட்டை படம் முதலில் வெளியானது.

எனவே இவரதும் நடிப்பில் முதலில் வெளிவந்த திரைப்படம் ரஜினியின் பேட்டை திரைப்படம் தான். பேட்டை திரைப்படத்தில் மெகா ஆகாஷ் அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் .

அதே ஆண்டில் அத்தாரிண்டிகி தாரேதி என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலமாக மீண்டும் சினிமா தெலுங்கில் நடிக்க ஆரம்பித்தார்.

பிறகு சிம்புவுடன் இணைந்து வந்தா ராஜா தான் வருவேன் என்ற திரைப்படத்தில் நடிகர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதில் இரண்டு நாயகிகளில் ஒருவராக மேகா ஆகாஷ் நடித்திருந்தார் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் கூட இவரின் நடிப்பு கவனிக்கப்பட்டு ரசிகர்களை கவர்ந்தது என்று சொல்லலாம்.

ரஜினி பத்திரிக்கை வைத்த மேகா ஆகாஷ்:

தொடர்ந்து அதர்வாவுக்கு ஜோடியாக பூமராங் உள்ளிட்ட படங்களில் மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார்.

இந்த நடிகை திடீரென தனது நீண்ட நாள் காதலருடன் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் மேகா ஆகாஷ் தனது வருங்கால கணவர் மற்றும் தனது தாய் தந்தை என குடும்பத்தினரோடு சென்று ரஜினிகாந்த்திற்கு வீட்டிற்கு தன்னுடைய திருமண பத்திரிக்கை வைத்திருக்கிறார்.

அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார் எனவே அதன் மூலம் மேகாஆகாசின் திருமணம் ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருவது தெரிய வந்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version