தாமதமாகும் திருமணம்.. தனுஷ் பட நடிகை செஞ்ச வேலையை பாத்தீங்களா..?

தமிழ் சினிமாவை பொறுத்தவரை, சில நடிகர்கள் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்கள். குறிப்பாக நடிகர் விஷால், கங்கை அமரன் மகன் பிரேம்ஜி, நடிகர் மற்றும் இயக்குனர் எஸ் ஜே சூர்யா, நடிகர் சிலம்பரசன் போன்ற முக்கிய முன்னணி நடிகர்கள் இன்னும் சில திருமணம் செய்யாமல் இருக்கிறார்கள்.

இதில் நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யா வயது 56 கடந்து விட்டது. இதற்கு மேல் எதற்காக திருமணம் செய்ய வேண்டும், இனிமேல் இப்படியே முரட்டு சிங்கிள் தான் என்று கூறிக் கொண்டிருக்கிறார்.

பிரம்மச்சாரிகளாக வாழும் தமிழ் நடிகர்கள்

நடிகர் விஷால், நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகுதான் திருமணம் என்று கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட இப்பதான் நிதியே வசூல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சிம்புவுக்கு 40 வயதுக்கு மேலாகியும், இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் அவரது தம்பி குறளரசன் திருமணமாகி, ஒரு குழந்தைக்கு அப்பா ஆகி விட்டார். சிலம்பரசன் பெரியப்பா ஆகிவிட்டார். ஆனால் இன்னும் அப்பாவாக வாய்ப்பின்றி, சிலம்பரசன் இன்னும் திருமணமாகாமல் இருக்கிறார்.

நடிகைகளும் அதே வழியில்…

இப்போது சில நடிகைகளும் இதே வழியை பின்பற்றி நடக்கின்றனர். அதாவது திருமணம் செய்து கொண்டால், சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியாது. குடும்ப வாழ்க்கையில் ஈடுபட வேண்டும். கணவர், பிள்ளைகள், வீடு குடும்பம் என வாழ வேண்டும். இப்படி கோடிக்கணக்கில் சம்பாதிக்க முடியாது. இந்த ஒரு சினிமா புகழ் நிறைந்த வாழ்க்கையை வாழ முடியாது என்பதால், சில நடிகைகள் வேண்டும் என்றே திருமணத்தை தள்ளிப் போட்டு விடுகிறார்கள்.

அதே நேரத்தில் இப்படி திருமணத்தை தள்ளிப் போட்டால், 40 வயது, 45 வயதுக்கு திருமணம் ஆகும்போது, குழந்தை பிறப்பதில் உடல் ரீதியாக பல சிக்கல்கள் ஏற்படும்.

குழந்தை பேறு சிக்கல்

அதனால் எதிர்காலத்தில் குழந்தை பேறு கிடைப்பது பாதிக்கப்படும் என்றும், கர்ப்பமடைவதில் சிக்கல் ஏற்படும் என்றும் கூறுவதால் அதற்கு இப்போது தீர்வாக, ஒரு விஷயத்தை துவங்கி விட்டனர்.

கருமுட்டையை சேமித்தல்

அதாவது இப்போதே கருமுட்டையை எடுத்து பிரீசரில் வைத்து பல ஆண்டுகளுக்கு பாதுகாத்து, திருமணம் எப்போது ஆகிறதோ, அப்போது எடுத்து அந்த கருமுட்டையை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்கின்றனர்.

நடிகர் ராம்சரண் மனைவி, இதுபோல் தனது கருமுட்டையை எடுத்து பிரீசரில் வைத்து 10 ஆண்டுகளுக்கு பின்தான், இப்போது குழந்தை பெற்றுக் கொண்டார் ஒரு தகவல் பரவி வருகிறது.

சீதாராமம் நாயகி

அதே போல் சீதாராமம் படத்தில் நடித்த மிருணாள் தாகூர், இதே போல் தனது கருமுட்டையை எடுத்து ஃப்ரீசரில் வைத்துவிட்டு, குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு தனது கருமுட்டையை பயன்படுத்தி கொள்ள இருப்பதாக, சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.

இப்போது அதே வரிசையில், மற்றொரு நடிகையும் இணைந்து இருக்கிறார். அவர் தனுஷ் நடித்த பட்டாஸ் என்ற படத்தில் ஹீரோயின் நடித்தவர் மெஹரீன் பிர்சாடா. அவர் தெலுங்கிலும் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார்.

28 வயதாகும் நிலையில்…

தற்போது 28 வயதாகும் அவர், தனது திருமணம் எப்போது என முடிவு செய்யாததால், தனது கருமுட்டைகளை எடுத்து உறைய வைத்து சேமித்து வைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

அவர் ஏற்கனவே பவ்யா பிஷ்னோய் என்பவரை நிச்சயதார்த்தம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வலி நிறைந்ததாக…

கருமுட்டை சேமிப்பு வழிமுறைகள் வலி நிறைந்ததாக இருந்தது என்றும், அது பற்றி தெளிவாக ஒரு நீண்ட பதிவையும் அவர் இன்ஸ்டாஸ்கிராில் போட்டிருக்கிறார். அது தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

இப்படி தாமதமாகும் திருமணத்தால், குழந்தை பேறு இல்லாமல் போவதை தடுக்க, தனுஷ் பட நடிகை மெஹரீன் பிர்சாடா செஞ்ச வேலையை பாத்து ரசிகர்கள் அசந்து போயுள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version