“மெனிக்யூர் உங்கள் வீட்டில் நீங்களே செய்து அசத்தலாம்..!” – எப்படி பார்க்கலாமா?

அழகுக் கலையில் முக்கியமாக கருதப்படக்கூடிய இந்த மெனிக்யூரை உங்கள் வீட்டிலேயே நீங்கள் செய்துவிடலாம். மெனிக்யூர் என்பது கை விரல் நகங்களை சுத்தமாக பராமரிப்பதை தான் மெனிக்யூர் என்று நாம் அழைக்கிறோம்.

மேலும் முகத்திற்கும் சருமத்திற்கும் எந்த அளவு நாம் முக்கியத்துவம் தருகிறோமோ, அதைப்போலவே கை விரல்களுக்கும் நகங்களுக்கும் நாம் முக்கியத்துவம் தருவதோடு அவற்றை அழகாக வைத்துக் கொள்ள என்னென்ன செய்யலாம் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

manicure

உங்கள் கைகளில் இருக்கும் விரல்களை அழகாக மாற்றுவதற்காக நீங்கள் செய்யும் பராமரிப்பு முறைகளை தான் நாம் மெனிக்யூர் என்று கூறுகிறோம். மேலும் இந்த முறையை உங்கள் வீட்டிலேயே இயற்கையான முறையில் பராமரிப்பதன் மூலம் உங்கள் கை விரல்கள் மட்டும் அல்லாமல் விரல்களில் இருக்கும் நகங்களும் மிக அருமையான ஆரோக்கியத்தோடு இருக்கும்.

மிக நீளமான நகங்களை வளர்ப்பது என்று பெண்களிடையே அதிகரித்து வரக்கூடிய சமயத்தில் இந்த நகங்கள் பொலிவில்லாமல் சிலருக்கு விரைவில் உடைந்து போக வாய்ப்புள்ளது. அப்படி விரல்கள் உடையக்கூடிய நிலையில் இருப்பவர்கள் அதற்கு உரிய ஈரப்பதத்தை கொடுப்பது அவசியம் எனவே அவ்வப்போது உங்கள் விரல்களை ஈரத்தில் நனைக்க வேண்டும்.

manicure

விரல்களை சுத்தம் செய்யும் போது நகங்கள் உடையாமல் இருக்க நீங்கள் பாதுகாப்பாக கையுறைகளை அணிந்து கொண்டு வேலைகளை செய்யலாம்.

உங்கள் விரல் பகுதியில் வைட்டமின் ஈ ஆயில், தேங்காய் எண்ணெயில் கொண்டு மசாஜ் செய்வதின் மூலம் ரத்த ஓட்டம் அதிகரித்து நகங்களுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.

manicure

நகங்களுக்கு உள் இருக்கும் அழுக்குகளை வாரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்வதோடு தரமற்ற நெயில் பாலிசிகளை பயன்படுத்தாதீர்கள். இதன்மூலம் உங்கள் நகத்தின் வளர்ச்சியும், பொலிவும், பாதிப்படையும். நெயில் பாலிஷ் அடித்திருந்தால் அதை நெயில் பாலீஸ் ரிமூவர் கொண்டு நீக்குவது சிறப்பானது.

நகங்களுக்கு போதிய அளவு போசாக்கு கிடைக்க நீங்கள் நகங்களில் கிரீம்களை தடவலாம். நகம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் மெனிக்யூர் செய்வதற்கு முன்பு நகங்களை சுத்தமாக வெட்டி விடுங்கள்.

manicure

மேற்கூறிய குறிப்புகளை நீங்கள் ஃபாலோ செய்வதின் மூலம் மெனிக்யூரை உங்கள் வீட்டிலேயே உங்களிடம் இருக்கும் பொருட்கள் கொண்டு மிக நேர்த்தியான முறையில் செய்து முடித்து விடலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …